Friday, April 25, 2014

"ர"வரிசைப்பாட்டு


ரத்தம் குடிக்கின்ற ஓநாயாம்
ராபர்ட்கிளைவ் என்ற ஆங்கிலேயன்
ரிப்பன் வளையல் விற்க வந்தான்
ரீல் விட்டு ராஜாக்களை பிரித்து வைத்தான்
ருசி கண்ட பூனை அவன் தந்திரத்தால்
ரூபம் இன்றி போனது பாரதம்
ரெடிமேட் பொருட்களை அவன் செய்ய
ரேகை தேய நாம் உழைத்தோம்
ரைட் லெப்ட் நம்மையே போடவைத்தான்
ரொட்டி துண்டுக்கு அலைய வைத்தான்
ரோபோ போல நடத்தி வைத்தான்
ரௌலட் சட்டத்தால் அடக்கி வைத்தான்
பார் தம்பி வரலாற்றை புரட்டி பார்!

"க"வரிசைப்பாட்டு


கருப்பு மூக்கு காக்கை ஒன்று
காட்டு மரத்தில் கூடு செய்தது
கிளையின் கூட்டுக்குள் காக்கைகுஞ்சு
கீச் மூச் என்று அழுதது
குஞ்சுக்கு இரை தேடி தாய் காக்கை
கூட்டை விட்டு பறந்து சென்றது
கெட்டிக்கார சிறுவன் கோபு பையன்
கேழ்வரகு வடைகள் வைத்திருந்தான்
கையில் நிறைய வைத்திருந்தும்
கொத்தியே காகம் பிடுங்கவில்லை
கோபு மகிழ்ந்து வடை கொடுத்தான்
கௌவியே காகம் பறந்து சென்றது
காக்கை குஞ்சுக்கு ஊட்டி விட்டது!

"ச"வரிசைப்பாட்டு


சட சட சட சட மழை வருது
சாரல் அடிக்கிற மழை வருது
சின்ன சின்ன பிள்ளைகளே
சீக்கிரம் வீட்டுக்கு போய் விடுங்கள்
சுட்டு தருவார் அம்மாதான்
சூடாய் போண்டா பஜ்ஜி வடை
செடியும் கொடியும் ஆடிடுமே
சேற்று தவளை பாடிடுமே
சைக்கிளில் வருவார் அப்பாதான்
சொட்ட சொட்ட நனைந்தபடி
சோலைகள் எங்கும் பூ பூக்கும்
சௌந்தர்யம் அதிலே தவழ்ந்து வரும்
பச்சை வயல்கள் மகிழ்ச்சி தரும்!

"த"வரிசைப்பாட்டு


தடதட என்று ஓடி வந்தார்
தாடி வைத்த காதர் பாய்
திகு திகு என்று எரிகிறதாம்
தீப்பிடித்து ஒரு வீடு
துள்ளி அனைவரும் எழுந்தார்கள்
தூக்கம் அனைவரும் தொலைத்தார்கள்
தெருவே அங்கே கூடியது
தேவையான உதவிகள் செய்தது
தைரியம் சிறிதும் குறையாமல்
தொண்ணூறு நிமிடம் போராடினர்
தோகைப்பாடி ஜனங்களெல்லாம்
தௌலத் பேகம் வீட்டாரை
பத்திரமாக காப்பாற்றினர்!

"ந"வரிசைப்பாட்டு


நமது இந்திய வரைபடத்தில்
நான்கு எல்லைகளும் குறிப்பாயா
நிலத்துக்கு எந்த வண்ணம் சொல்
நீருக்கு எந்த வண்ணம் சொல்
நுனி முதல் அடி வரை பூகோளத்தை
நூலிழை விடாமல் அறிந்து கொள்
நெதர்லாந்து எங்குள்ளது
நேபாளம் எங்குள்ளது
நைஜீரியா எங்குள்ளது
நொடியில் சொல்ல கற்று கொள்
நோக்கி நோக்கி பழகி கொள்
நௌவாக்சோட் ஒரு தலைநகரம்
எந்த நாட்டுக்கென்று சட்டென்று சொல்

"ல"வரிசைப்பாட்டு


லட்டு நிறைய வேண்டுமென்று
லாரன்ஸ் பையன் கேட்கின்றான்
லிப்ஸ்டிக் நிறைய வேண்டுமென்று
லீலா பொண்ணு கேட்கின்றாள்
லுங்கி நிறைய வேண்டுமென்று
லூக்காஸ் மாமா கேட்கின்றார்
லெஸ்சி நிறைய வேண்டுமென்று
லேடி ஒருத்தி கேட்கின்றாள்
லைஃப்பில் ஆளுக்கொரு ஆசைதான்
லொக்லொக் என்று இருமிக்கொண்டு
லோகநாதன் தாத்தா சொல்கின்றார்
லௌகீக வாழ்வை முறை செய்தால்
தொல்லை வாழ்வில் என்றும் இல்லை!

"வ"வரிசைப்பாட்டு

வயலூர் என்றொரு கிராமத்தையே
வாருங்கள் போய் பார்த்து வரலாம்
விழாக்கள் கொண்டாடும் சமயத்திலே
வீர விளையாட்டுக்கள் அங்குண்டு
வுபாத்தியாயரிடம் பயின்றிடவே
வூருக்குள்ளே பள்ளியுண்டு
வெட்டியாய் பொழுதை கழிக்காமல்
வேலை செய்யும் மக்களுண்டு
வைகை ஆறும் அங்குண்டு
வொன்றாய் நன்றாய் வசித்திடவே
வோட்டு வீடுகளும் அங்குண்டு
வௌவால் வந்து பழம் தின்னும்
செவ்வாழை மரங்களும் அங்குண்டு!

குழந்தைப்பாடல்-12

"அ"வரிசைப்பாட்டு
அலைஅலை அலைஅலை அலைகடலே
ஆமை வசிக்கின்ற அலைகடலே
இரவும் பகலும் பாராமல்
ஈகை செய்கின்ற அலைகடலே
உப்பளம் தனிலே உப்பானாய்
ஊருக்கெல்லாம் மழை தந்தாய்
எத்தனை எத்தனை உயிரினங்கள்
ஏராளமான செல்வவளங்கள்
ஐயோ எப்படி சுமக்கின்றாய்
ஒரு தெய்வத்தாயும் நீதானே
ஓலமிட்டு அழுகின்ற உள்மனதை
ஔடதம் தந்து மகிழ்விக்கும்
அஃது உனது குளிர் காற்று!

குழந்தைகள் உரிமை



குழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;

குழந்தைகள்

மனித கண்ணியத்துடன் வாழும் உரிமை.
பெற்றோரின் பராமரிப்பில் வாழும் உரிமை.
இனம், நிறம், பால், தேசியம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடில்லாமல் வாழும்

ஆவணங்களில் முகவரியை மாற்ற வேண்டுமா ?



(ரேசன் கார்டு,வாக்களர் அட்டை,ஓட்டுநர் உரிமம்,வங்கி கணக்கு , பாஸ் போர்டு )


வீடு மாறினாலோ, வேலை காரணமாக ஊர் மாறினாலோ நமது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம். குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

குடும்ப அட்டையில் முகவரி மாற்ற :

தேவையான ஆவணங்கள்:
முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ் இணைப்பைத்தான். அதற்கு தற்போது குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தந்தை அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால்

பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?


ஒரு குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் முக்கிய ஆவணம் பிறப்புச் சான்றிதழ். முன்பெல்லாம் குழந்தை பிறத்தல் என்பது வழக்கமாக வீடுகளிலே நிகழும் ஒரு நிகழ்வு என்பதால் உள்ளூர் மணியக்காரர், தண்டல்காரர்(கிராம உதவியாளர்கள்) போன்றவர்களே பிறப்பை பதிவு செய்யும் வேலையை பார்த்துக்கொள்வர். ஆனால் தற்போது வீட்டிலே குழந்தை பிறந்தால் கூட அப்பிறப்பைப் பதிவு செய்வது பெற்றோரின் முக்கியமான கடமை. இந்திய அரசு, குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் முதலான

மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights)

ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.

Coupleபெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும்

தமிழ்நாடு வீட்டு வாடகை, குத்தகை, கட்டுபாட்டுச் சட்டங்கள்


இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை, இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும்

நுகர்வோர் என்பவர் யார்?


இந்த மண்ணில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனுமே நுகர்வோர்தான்! நாம் செலவழிக்கும் பணத்துக்கு ஈடாக பொருள் வாங்கும்போதோ, சேவையைப் பயன்படுத்தும் போதோ நுகர்வோர் ஆகிறோம். சற்றுப் பின்னோக்கிச் செல்வோமெனில், பண்டமாற்று முறையே வணிக முறையாக நிலவி வந்த காலமுண்டு. அதற்குப் பின் வந்த காலங்களில் வாணிபத்துக்குப் பணத்தை பயன்படுத்தும் முறை வந்தது. அந்தக் காலகட்டத்தில்கூட மனிதர்கள் நேர்மையாகவும், போற்றுதலுக்குரிய முறையிலும் வணிகம் நடத்தி வந்தனர் என்று வரலாறு கூறுகிறது. காலம் செல்லச் செல்ல மனிதனின் பேராசையால் வணிக முறையில் கலப்படம், பொருட்களின் எடை மற்றும் அளவு குறைத்தல், அதிக விலைக்கு

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு...


ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து