Sunday, November 29, 2015

கணித பாடம் கற்பித்தலின் அவசியம்

“என்னும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்ற ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை அடிப்டையாகக் கொண்ட கணிதப்பாடமும் எழுத்தை அடிப்டையாகக் கொண்ட மொழிப்பாடமும் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றுள் கணித பாடம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

கணிதம் எண்கணிதம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுகின்றது. ஆரம்பக் கல்வி பெறும் பிள்ளைகள் 1 இலிருந்து 100 வரை சரியாக எண்ணுவதற்குக் கற்றுக் கொண்டால் தான் கூட்டல் - கழித்தல் - பெருக்கல் - பிரித்தல் போன்ற கணக்குகளைப் படிப்படியாக செய்து கொள்ளமுடியும்.
‘மொண்டிசூரி’ப் பாடசாலையில் சேர்ந்து ஆரம்பக் கல்வியைத் தொடரும் பிள்ளைகள் பொருட்களை இனங்கண்டு எண்ணுவதற்கு முற்படுகின்றனர். முதலில் கைவிரல்களை எண்ணுவதற்கு பிள்ளை தயாராகின்றது. ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் என்றும் இரண்டு கைகளிலும் 10 வில்கள் என்றும்