Wednesday, April 22, 2015

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

வரலாற்று புகழ்பெற்ற நகரம். தமிழகத்தில் நடந்த வரலாற்றுப் போர்களில்கிருஷ்ணகிரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கான வாழும் ஆவணமாகக் கனத்த மதில் சுவர்களுடன் ஒரு பழமையான கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இதன் பெயர் சையத் பாட்சா கோட்டை. இக்கோட்டையும் அருகேயுள்ள அணைக்கட்டும் கண்டு ரசிக்க அற்புதமான சுற்றுலாத் தலங்கள்.கிருஷ்ணகிரி 2004 ஆம் ஆண்டு தருமபுரியிலிருந்து

கரூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்


கல்யாண வெங்கடராமசாமி கோயில்

தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோயில் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. கரூர்

மாவட்டத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்று. கரூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயிலுக்குப் பக்தர்கள் வந்த வண்ணம்

அரியலூர் சுற்றுலா தளங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் :

 தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்டது இந்த கங்கை கொண்ட சோழபுரம் கோயில். புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டியது. இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர். 

இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர், சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்கள் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சோழர்களின் பழமையான சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனிப்பெருமை

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் விழுப்புரம். மயிலம் முருகன் கோயில், திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில், சிங்கவரம் ஒற்றை கற்கோயில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், ஆழ்வார்கள் பாடிய உலகளந்த பெருமாள் கோயில் உள்ள திருக்கோயிலூர், அழகிய மரக்காணம் கடற்கரை, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் எனப் பார்க்க வேண்டிய

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

துறைமுகம்

 மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும்

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

தஞ்சை பெரிய கோயில் & தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்


தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு. விமானத்தின் உயரம் 216 அடிகள். இதன் மேலுள்ள கலசம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதன் நிழல் தரையில் விழாதது இன்னொரு சிறப்பு. கருவறைக்கு எதிரில் 12 அடி உயரம், 19 அடி நீளம், 8 அடி அகலத்தில் மிகப்பெரிய நந்தி இருக்கிறது. உட்புறச் சுவர்களில சோழர் மற்றும் நாயக்கர் கால ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன. அஜந்தா ஓவியங்களைப் போல

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ராமநாதபுரம் அரண்மனை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரண்மனை ஆகும். சேதுபதி ராஜாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை இராமலிங்க விலாசம் என்றும் அழைக்கபடுகிறது. இது ஏறத்தாழ மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். இங்குதான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆஷ் துறையுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக

மதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

அழகர் கோயில்

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது. இந்த மலையில் அமைந்திருக்கும் சோலை மலை என்ற குன்றில்தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்


அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா
வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள்

பண்ணாரி அம்மன் கோயில்


தமிழகத்தில் மிகப் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. இக்கோயிலில் குடிகொண்டுள்ள மாரியம்மன் மிகச் சக்தி வாய்ந்த தேவதையாக இப்பகுதி மக்கள் கருதி வழிபடுகிறார்கள். பவானி சாகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயில்

கோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்

வெள்ளியங்கிரி மலை : 

கோவையிலிருந்து மேற்கே 37 கி.மீ தூரத்தில் பூண்டி எனப்படும் வெள்ளியங்கிரித் திருத்தலம் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டமான வடிவங்களில் ஒரு பகுதியாக விளங்குகிற இங்கே சிவபெருமான் லிங்கத்திரு மேனியராக எழுந்தருளியுள்ளார் அடிவாரத்திலிருந்து அடுக்காக தொடரும் மலைகளுக்கு அப்பால் உயரமான இடத்தை தனக்குரிய தலமாக தேர்ந்தடுத்துள்ளார் நில மட்டத்திலிருந்து