Monday, June 20, 2016

மாணவர்களின் ஆங்கில அறிவினை வளர்க்க உதவும் Educational Soft wares:


1. Beans word game:
LSRW எனப்படும் (Listening) கவனித்தல், (Speaking) பேசுதல், (Reading) படித்தல் மற்றும் (Writing) எழுத்துதல் திறனை வளர்க்க உதவுகிறது. இதில் படங்கள் முதலில் கண்பிக்கப்பட்டு பிறகு அவற்றை எப்படி வாசிப்பது என வாசித்து காட்டும். மாணவர்கள் நன்கு கவனித்து அவற்றை சரியாக Type செய்ய வேண்டும். இவ்வாறு பத்து பத்து படங்களாக காண்பிக்கப்பட்டு அவற்றின் பெயர்களை தெரிந்துகொண்ட பிறகு பாராட்டு கோப்பை கிடைப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றல் செயலில் ஈடுபடுகின்றனர்.
http://download.cnet.com/Beans-Wo…/3000-2279_4-10892816.html
2. Zero:
இதில் மாணவர்கள் முதலில் தங்கள் பெயர்களை முதலில் Type செய்ய வேண்டும். Type செய்த பிறகு அவர்களின் பெயர்கள் பல வண்ணங்களில் பலவிதமான Font-ல் தோற்றமளிக்கும். இது மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். பிறகு இதில்
1,2,3……..12 Levels வரை இருக்கும். மாணவர்கள் விரும்பும் Level ஐ தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பிறகு ஒரு ஆங்கில வார்த்தை உச்சரிக்கப்பட்டு அந்த வார்த்தை காண்பிக்கப்படும். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அந்த வார்த்தையை Type செய்ய வேண்டும். இவ்வாறு இதிலும் பத்து பத்து வார்த்தைகளாக மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு Level முடித்த பிறகும் மாணவர்கள் விரும்பக்கூடிய game ஒன்று வருவதால் மாணவர்கள் கூடுதல் மகிழ்ச்சியுடன் கற்கின்றனர்.

MATH RAPID

அடிப்படை கணக்குகளை அதிவிரைவாக செய்ய அற்புதமான Educational software
MATH RAPID.
மாணவர்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு தேவையான Levels யை Select செய்து விளையாடிகற்க முடியும். இதில் Novato (easy), Normal, Experto என உள்ளது. இதில் எந்த Stage வேண்டுமோ அதை Select செய்துகொள்ளலாம். மேலும் அடிப்படை செயல்களை தனித்தனியாகவோ, சேர்த்தோ விளையாடும் வசதி உள்ளது.
http://mathrapid.en.softonic.com/download

Mathman

Superman, Spiderman, batman மற்றும் Ironman ஐ தொடர்ந்து இன்று ரிலீசானது Mathman எங்கள் பள்ளியில்.
Mathman என்ற Educational Software மூலம் என்றும் இல்லாத அளவுக்கு ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் இன்று (30.10.2015) கணினிவழியில் கணிதம் கற்றனர் எம்பள்ளி மாணவர்கள்.
பயன்படுத்தும் முறை:
கீழே உள்ள Link ஐ Click செய்து Download செய்து Install செய்து கொள்ளவும். Install செய்தவுடன் Desktop ல் Mathman Icon தோன்றும் அதை Click செய்தஉடன் விளையாட ஆரம்பிக்கலாம். விளையாடுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி விளையாடிக்கொண்டே கணக்குகளை கற்கலாம்.
http://toomkygames.com/download-free-games/math-man

Snake maths software

Snake Babu தெரியும் Snake Maths தெரியுமா?
Snake Maths என்பது ஒரு Maths Educational Software. 23.10.2015 அன்று Snake Maths என்ற Educational Software மூலம்அடிப்படை கணித செயல்பாடுகளை எம்பள்ளி மாணவர்கள் கணினி மூலம் கற்றனர். Add User என்ற இடத்தில் மாணவர்களின் பெயர் மற்றும் வயதினை பதிவிட்டப்பின் Addition, Subtraction, Multiplication, Division போன்றவற்றில் எது வேண்டுமோ அதை கிளிக் செய்தவுடன் Time Speed set செய்துகொண்டு Practice என்பதை கிளிக் செய்து கணக்குகளை செய்ய தொடங்கலாம். கணக்குகள் போடப்போட Percentage-ல் மதிப்பெண்கள் காட்டிக்கொண்டே இருக்கும். இதனால் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து விரைவாக செயல்படுகின்றனர். சரியாக செய்தால் Smiling face லும் தவறாக செய்தால் Crying face லும் பொம்மை வருவது கூடுதல் சிறப்பு. இதேபோல் குட்டி பிள்ளைகளுக்கு பிடித்த Math Ninja Educational games மாணவர்களுக்கு பிடித்தமானதாக உள்ளது. இதிலும் பல நிலைகள் உள்ளது. மாணவர்களுக்கு Easy, intermediate, Expert என மாணவர் விரும்பு Levels யை எடுத்து விளையாடிக்கொண்டே கணிதம் கற்க வழிவகை செய்யலாம். 

இந்த வார Educational Software Childsplay.


ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய புதிய Educational Software மூலம் கணிதம் கற்றுகொடுப்பது வழக்கம். இந்த வாரம் மிக அழகிய குட்டி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது இந்த Childsplay Educational Software. இது மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல விளையாட்டுகள் மூலம் அடிப்படை செயல்களை செய்யும் வகையில் உள்ளது.
http://sourceforge.net/projects/schoolsplay/

This week Educational software is MatheMax Pro.


இந்த MatheMax Pro மூலம் மாணவர்களின் திறமைக்கேற்ப அவர்களின் பெயருடன் கூடிய மேலும் பல Settings உடன் மாணவர் விரும்பும் வகையில் கணித அறிவை பெற வழிவகை செய்கிறது.

This week Educational Software is Graph Maker:



இந்த Educational Software மூலம் ஆறாம் வகுப்பில் உள்ள பயிற்சி 3.2ல் 7 கணக்குகளையும் மற்றும் எட்டாம் வகுப்பில் உள்ள பயிற்சி 3.1ல் உள்ள 10 கணக்குகளையும் மற்றும் 3.2ல் உள்ள 15 கணக்குகளையும் சரியாக செய்யவும், செய்த கணக்குகள் சரியாக உள்ளதா? என சரிபார்க்கவும் உதவுவதோடு, மாணவர்கள் ஆர்வமுடன் கற்கவும் உதவுகிறது.
இந்த Educational Software ல் X அச்சிலும், Y அச்சிலும் மாணவர்கள் விவரங்களை கொடுத்தவுடன் செவ்வக விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம் மற்றும் வட்ட விளக்கப்படம் என மாணவர் விரும்பும் படங்கள் தோன்றும். இவற்றின் மூலம் எவ்வாறு விளக்கப்படங்கள் வரையலாம் என மாணவர்கள் அறிந்து செயல்பட முடிகிறது. அத்துடன் பல வண்ணங்களில் கண்ணுக்கு விருந்தாகவும் அமைகிறது. மாணவர்கள் வட்ட விளக்கப்படங்களை மிகுந்த ஆர்வத்துடன் செய்து செய்து பார்க்கின்றனர். அதற்கு காரணம் Animation தான். கொடுக்கும் விரங்களுக்கு ஏற்றார்போலும், சதவீத்தத்திற்கு ஏற்றார்போலும் Animation வருவது கூடுதல் சிறப்பு. தாங்களும் தங்கள் மாணவர்களுக்கு இதை பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Download செய்து பயன்படுத்தவும் நண்பர்களே!
http://www.softpedia.com/…/Others/Home-Ed…/Graph-Maker.shtml