Wednesday, March 28, 2018

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire):



உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலைமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும்

Tuesday, March 27, 2018

ஒரு சாமானியன், சக்ரவர்த்தியான‌ சரித்திரம்!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 
பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட்.

அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால்
நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம்.

இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும்
ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் மாவீரன் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல் முறை. ”விதியை வென்ற நெப்போலியன்” என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு.

பிறப்பு:
கி.பி.1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில்

Monday, March 26, 2018

அலெக்ஸாண்டர் (THE GREAT )



இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால்!
வீரமும் விவேகமும் இவன் ஆயுதம்!
கம்பீரமும் அழகும் இவன் சக்தி!
எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க
வைத்த கிரேக்கப்புயல் இவன்!
ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால்
ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் இவன்!.
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம் இவரின் புகழை.

பிறப்பு:
கிருஸ்து பிறப்பதற்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி மாஸிடோனியாவின் மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. மகன் பிறந்த மகிழ்ச்சி, குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் என