Tuesday, November 26, 2013

ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கற்பனைத் திறன்

தமிழ்
தமிழினை படிக்க வேண்டும்
தமிழனாக வாழ வேண்டும்
தரணியில் அதன் புகழை
தயக்கமில்லாமல் பரப்ப வேண்டும்.
ஆங்கிலம்
ஆங்கிலமும் பயில வேண்டும்
அதனறிவைப் பெற வேண்டும்
அகிலமெங்கும் பேசுவதால்
அவசியமாய் அதை

முதல் வகுப்பு மாணவர்களின் கலைத்திறன்

 ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி - ஜெயங்கொண்டான் . செஞ்சி ஒன்றியம்.



கல்வியின் அவசியம் - கவிதை

கல்வி
படித்தால் நமக்கு உயர்வு.
படிக்காவிட்டால் நம் வாழ்வு சரிவு.
வாழ்வில் என்றும் படிப்பு.
படித்தால் நம் முகத்தில் என்றும் சிரிப்பு.
புத்தகத்தை திறந்தால் இன்பம்.
மூடினாலோ மிகப்பெரிய துன்பம்.
படிக்காவிட்டால் நம் வாழ்க்கை கஷ்டம்.
அதை கற்றால் வாழ்க்கை தேடிவரும் நம் இஷ்டம்.
                    
மு.யாசர் அராபத்

‘IX’ STD ‘B’ SEC

Alphapets

             மாணவர்களுக்கு எளிய முறையில் செயல்வழி கற்றல் முறையில்   எழுத்துக்களை அடையாளம் காணும் முறையை எங்கள் பள்ளி மாணவர்கள்  செய்து காட்டினர்.


இப்பொருட்கள் கிராமத்தில் தெரு மற்றும் வயல் ஓரங்களில் இருக்கும் செடிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாணவர்கள் எழுத்துக்களை செய்தனர். திருப்புதலில் மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம்.




Physics

  1. Physics 1st Volume 5 Mark Sum & Solutions - Tamil Medium
  2. Physics 1st Volume 5 Mark Sum & Solutions - English Medium

Monday, November 25, 2013

EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி?


EMIS - Offline Photo Resize Tutorial 
Step By Step Instruction Now Available.

Step  1:

        எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய வேண்டும்.

Friday, November 22, 2013

பள்ளி கல்வித்துறை சார்ந்த அரசாணைகள்.

+2 இயற்பியல் -மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேடு

நிதித்துறை அரசாணைகள்

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி (TPF) 1994- 1995 முதல் 2012-2013ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு வட்டி கணக்கிடும் முறை

Sunday, November 17, 2013

இணையதளங்களில் உங்களுடைய பிள்ளைகளை ஆபசங்களில் இருந்து தடுப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா ?


இணையதளங்களில் உங்களுடைய  பிள்ளைகளை ஆபசங்களில் இருந்து தடுப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா ?நீங்கள் விரும்பாத அல்லது பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?
இவ்வாறான பக்கங்களை தடுப்பதற்கு சந்தையில் பல மென் பொருட்கள் உலா வருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென் பொருட்களை பயன்படுத்தவேண்டும் விண்டோஸ் Windows XP, Vista, 7 இயங்கு முறைமையிலேயே அதற்கு வழி இருக்கிறது
இதனை மேற்கொள்ள முதலில் உங்கள் கணினியில் உள்ள ஏதாவதொரு administrator கணக்கினூடாக உள் நுழைந்து கொள்ளுங்கள் பின் உங்கள் My Computer இல் உள்ள

Saturday, November 16, 2013

More than 100 Keyboard Shortcuts must read

Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)

Friday, November 15, 2013

சமையல் பொருட்கள் -English -Tamil - தமிழ்

சமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயரோ என்று குழம்புபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.ஆங்கிலத்தில் சொல்லும் உணவு பெயர்களுக்கு தமிழில் என்னவாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கும் இதில் தேடினால் பல வார்த்தைகளுக்கு விடை கிடைக்கலாம்.தங்களுக்கு தெரிந்த இது போன்ற இந்த தொகுப்பில் அடங்கக் கூடிய உணவு குறித்த வார்த்தைகளை தெரிவித்தால் இதனில் சேர்த்து விடுகிறேன்.
ஆங்கிலத்திலும் சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்த பின்பு ஒரு சில நேரம் சில தமிழ் வார்த்தைகளுக்கு சட்டென்று ஆங்கில வார்த்தைகள் பிடிபடாமல் போய்விடுகிறது.அந்த நேரத்தில் எங்கு போய் தேடுவது.அப்பொழுது இவை உதவியாக இருக்குமே என்று தான் இந்த தொகுப்பை சேமித்து வைத்திருந்தேன்.
இது உங்களுக்கும் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியே.
                                                                                                                                    English to Tamil
English Tamil தமிழ்
Vegetables /காய்கறிகள்
Bottle gourd - Suraikkai - சுரைக்காய்
Cauli flower - Kali flower - காலிபிளவர்
Capsicum - Koda milagai - குடைமிளகாய்
Carrot - Carrot - கேரட்
Red Chilly - Kaanja Milagai - 
வரமிளகாய்
Green Chilly - Patchai Milagai - 
பச்சை மிளகாய்
Coconut - Thengai - 
தேங்காய்
Sambar Onion-  Chinna (or) Sambar Vengayam - 
சின்ன வெங்காயம்
Spring Onion - Vengaya thaal (leaves) - 
வெங்காயத்தாள்
Onion - Vengayam - 
வெங்காயம்
Green Peas - Pachai Pattani - 
பச்சைப் பட்டாணி
Potato - Urulai kilangu - 
உருளைக்கிழங்கு
Tomato - Thakkali - 
தக்காளி

Wednesday, November 13, 2013

EMIS ல் மாணவர்களின் புகைப்படத்தினைப் பதிய புகைப்படத்தின் அளவை 200*200 அளவுடனும் 30kb கும் குறைவாகவும் மாற்றும் முறை.

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி.?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்தைத்தான்.   இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன. அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள்.  வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை. பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.
சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்
2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்.
உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்
3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும். அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும். உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்.

திறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 16.11.2013 அன்றைய குறுவள மையப்பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம் மற்றும் powerpoint slides

Sunday, November 10, 2013

கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை விரைவாக செய்ய


கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை விரைவாக செய்ய Addition game என்கிற Software உதவி செய்கிறது.
இந்த software –ல் ஏளியன்ஸ்கள் (Aliens) கூட்டல், கழித்தல் என மாற்றி மாற்றி கேள்விகள் கேட்கப்படுகிறது. சரியான விடையை அளித்தால் திரும்பி சென்றுவிடுகிறது. தவறான விடையளித்தாலோ அல்லதுவிடையளிக்க தாமதம் செய்தாலோ நம்முடைய நகரத்தின் மீது எரி குண்டுகளை வீசிவிட்டு செல்கின்றன. இதனால் மாணவர்கள் நகரத்தை காப்பாற்றும் எண்ணத்துடன் விரைவாக கணக்குகளை செய்து சரியான விடையை விரைவாக  அளிக்கின்றனர்.
இதனை முடித்த மாணவர்கள் மனதில் spiderman, superman போன்ற எண்ணம் வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.


பயன்படுத்தும் முறை:



இதில் Beginner, Intermediate, Advanced, Impossible போன்ற பல நிலைகள் உள்ளது. Beginer Stage – ல் எளிய கணக்குகளும் intermediate Stage –ல் சற்று கடினமான கணக்குகளும் கேட்கப்படுகிறது. எளிமையிலிருந்து கடினம் என்ற இலக்கு நோக்கி செல்வதால் மாணவர்கள் சிரமமின்றி மகிழ்ச்சியுடன் கற்கின்றனர். ஒவ்வொரு Stage- லும் Level 1, Level 2, Level 3 என 10 Levels உள்ளது. 10 Levels யையும் முடிக்கும் மாணவர்கள் கணித வகுப்பில் தன்னம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் பங்கேற்று சிறந்த மாணவர்களாக திகழ்கின்றனர் எங்கள் பள்ளி (ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, பொன்பத்தி) மாணவர்கள். நீங்களும் இதை பயன்படுத்தி எப்படி உள்ளது என்று தங்கள் கருத்தை பகிரவும்.


Friday, November 8, 2013

அடிப்படைச் செயல்களை ஆர்வத்துடன் கற்க அருமையான software.

ஆசிரியர் நண்பர்களுக்கு அன்பான வணக்கம்.
மாணவர்களின் கணித அறிவை வளர்க்க அடிப்படைச்செயல்கள் (கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ) மிக அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை ஆர்வத்துடன் கற்க Math Educator என்கிற software உதவி செய்கிறது.
எங்கள் பள்ளியில் (ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி – பொன்பத்தி. செஞ்சி ஒன்றியம். விழுப்புரம் மாவட்டம். ) மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை திறமையாக செய்ய பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் இந்த Math Educator.
 இவற்றைப் பயன்படுத்தி கணினியின் மூலம் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுகின்றனர். வாரத்தில் ஒருநாள் (வெள்ளிக்கிழமை) இதற்காக பயன்படுத்துகிறோம். இதைப் பயன்படுத்தி கற்றலில் ஈடுபடும் போது மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் கற்கின்றனர். இதன் பிறகு தன்னம்பிக்கையுடன் கணித வகுப்பில் செயல்படுகின்றனர்.
பயன்படுத்தும் முறை:
இதில் Addition(கூட்டல்), Subtraction(கழித்தல்), Multiplicationபெருக்கல்), Division(வகுத்தல்) என நான்கு பிரிவுகள் உள்ளது.இதில் ஒவ்வொரு பிரிவிலும்  Level 1, Level 2, Level 3 என மூன்று உட்பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு Level –லிலும் 10 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு option கொடுக்கப்படுகிறது. சரியான விடையை Click செய்தவுடன் சரியாக இருந்தால் Correct என்றும்,
தவறாக இருந்தால் Wrong என்றும் பதிலளிக்கும். 10 வினாக்களுக்கு விடையளித்தப்பின் எத்தனை மதிப்பெண்கள் பெற்றனர் என்ற விவரம் கொடுக்கிறது. இதனால் அவர்களின் திறமையை அவர்களே கண்டறிந்து செயல்படுகின்றனர். நீங்களும் இந்த software – ரை Download செய்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தியப் பின்  தங்களின் மேலான கருத்துக்களைப் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  இந்த Software – யை Download செய்ய கீழே உள்ள Link – கை கிளிக் செய்யவும்.

பெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க அருமையான 2 Softwares :

பெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க A Maths Games of MultiplicationMultiplication 101என்கிற Softwares துணைபுரிகிறது.

1. A Maths Games of Multiplication இதில் 1 முதல் 10 வாய்பாடுகள் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் எளிமையாக கற்கவும், கற்றதை மனதில் பதியவைக்கவும் முடிகிறது.
மாணவர்கள் சரியாக செய்தால் Robo போன்ற உருவம்,Correct, Verygood,, Great Job, God Job, Wonderful போன்றComments கொடுப்பதால், ஒவ்வொரு முறையும் நாம் சரியாக செய்தோம் என்ற மகிழ்ச்சி மாணவர்கள் மனதில் ஏற்படுகிறது.
மேலும் கற்கும் மனநிலை மாணவர்கள் மனதில் ஏற்படுகிறது. தவறாக செய்தால், எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கமும் தருகிறது. ஒவ்வொரு வாய்பாட்டின் முடிவிலும்Your Answer Correctly : _ Questions out of _ . என Result காட்டப்படுகிறது. மதிப்பெண் குறைவாக பெற்றால் Repeat Problem Questions எனவும், முழுமையாக செய்ய Play Again எனவும், அனைத்தும் சரியாக செய்தால் More Quizzes எனவும்வருகிறது. More Quizzes என்பதை கிளிக் செய்தால் முதன்மை பக்கத்தைக் காட்டும். அதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை கிளிக் செய்து அடுத்த வாய்பாட்டிற்கு செல்லலாம். இதை முடித்த பிறகு எந்த வாய்பாட்டில் எப்படி மாற்றி கேட்டாலும் விடையளிக்கும் திறனை மாணவர்கள் பெறுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

2. இதே போல்Multiplication 101 என்கிற Software பெருக்கலை எளிமையாக செய்ய துணைபுரிகிறது. இதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டால் அதில் மாற்றி மாற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். 10 வினாக்களுக்கும் சரியாக பதில் அளித்தால் பெரிய கைத்தட்டல் கிடைக்கும்.
இதுவும் மாணவர்களின் பெருக்கல் திறனை வளர்க்க பெரிதும் உதவுகிறது.
இவற்றை நீங்களும் உங்கள் பள்ளியில் பயன்படுத்தி பார்த்து எப்படி உள்ளது என தங்களின் மேலான கருத்துக்களை பகிருங்கள் ஆசிரிய நண்பர்களே! வேறு ஏதேனும் நல்ல Software  இருந்தால் தெரியபடுத்தவும் . இதை பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள் பல. 


Thanks . Thank you very much. Have nice day.

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்



1 . HOME SCHOOL MATHS.NET . 
     தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று 
கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது; 

   கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை 
விளக்கத்துடன் தருகிறது இந்த தளம். 

    கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை 
விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது. 

குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு 5வலைதளங்கள்!

         உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.


           உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
1.www.starfall.com

பள்ளி செல்வதற்கு முன்னதாக, ஒரு குழந்தை வாசித்துப் பழகுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை தருவது இந்த இணையதளம். Alphabets, Learning to read, Its fun to read and I am reading என்ற 4 நிலைகளில் வாசித்தல் செயல்பாடுகள் இதில் உள்ளன. புதிய வார்த்தைகளை சொல்லித் தருவதற்கான எளிய விளையாட்டுகளும், சிறுகதை புத்தகங்களும் உள்ளன.

நமக்கு விருப்பமான புத்தகத்தை நாம் தேர்வுசெய்து, ஒவ்வொரு பக்கமாக செல்லலாம். உங்களுக்கு ஒரு வார்த்தை தெரியவில்லை எனில், அதை கிளிக் செய்தால், அது phonetic அடிப்படையில் படிக்கப்படும். இதன்மூலம், குழந்தைகள் தங்களின் ஆரம்பநிலை வாசித்தலை அருமையாக தொடங்கலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 - இறுதியான விடைகள் (Final answer key)

Tuesday, November 5, 2013

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

TET Weightage Easy Calculation Excel File

1.CLICK HERE-TET WEIGHTAGE CALCULATION

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்குதகுதி தேர்வு மதிப்பெண்பிளஸ்2 மதிப்பெண்பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்பிளஸ்2 தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும்பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60க்கு மாற்றப்படும். பிளஸ்2டிகிரிபி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:

TNTET RESULT 2013

Monday, November 4, 2013

Blue Screen Error (Blue Screen of Death -BSOD) பிரச்சனைகளும், தீர்வும்


BSOD
Windows has been shut down to prevent damage to your computer என்ற செய்தியுடன் நீலத்திரைப் பிழை (Blue Screen Error, Blue Screen of Death-BSOD) சில சமயம் கருந்திரையாகவும் (Black Screen) வருவதுண்டு. இது பல காரணங்களால் வருகிறது. விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் இப்படியான தவறுகள் லீனக்ஸ் கணினிகளில் வருவதில்லை. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.
Page Fault error எனப்படும் 0×00000050 என்பது Blue Screen of Death (BSOD) எனவும் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. Hard Disk, ட்ரைவர்(Device Driver), சில மென்பொருள் காரணமாக, இயங்கிக் கொண்டிருக்கும் கணினியில், தரவுகள்(data) அழியாமலும், கணினியைக் காப்பதற்காகவும் கணினி நீல நிறத் தவறு (Blue Screen Error ) எனக் காட்டி கணினி இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

11ஆல் பெருக்குதல் - இரு இலக்க எண்கள்


62 x 11 = ?

  • வலது இலக்கம் 2. இடது இலக்கம் 6
  • வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 2 + 6 = 8
  • விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 6 8 2
    என்னது விடை வந்திருச்சா? அப்படின்னு ஆச்சரியப்படாதீங்க. வேணும்னா கால்குலேட்டரை எடுத்து செக் பண்ணிப் பாருங்க. ஆச்சரியம் அதிகமாகணும்னா அடுத்த உதாரணத்தையும் பாருங்க.

    வகுத்தல் : 5,50,500 ஆல் வகுப்பது எப்படி?

    எனக்கு எண் 5ன் மேல் தனி பாசம். ஏனென்றால் 5ஐ வைத்து வருகின்ற கணக்குகள் எல்லாம் பெரும்பாலும் மிகச் சுலபமாக இருக்கும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, என்னுடைய விஷயத்தில் 5 என்றால் எளிமை. தற்போது கணிதத்தை பயின்றபின் 50, 500 இவைகளும் எளிமை லிஸ்டில் சேர்ந்துவிட்டன.


    இந்த முறை 5, 50, 500 ஆகிய மூன்று எண்களையும் வைத்து எப்படி எளிமையாக வகுப்பது என்று பார்க்கலாம்.

    மேலே உள்ள அட்டவணையை கையில் வைத்துக்கொண்டு பின்வரும் வகுத்தல் கணக்குகளை இப்போது முயற்சிக்கலாம்.



    5ஆல் வகுப்பது - உதாரணம் 117 / 5 = ?
    முதலில் 17ஐ இரண்டால் பெருக்குங்கள்
    17 x 2 = 34
    அடுத்து விடையின் வலது புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி ஒரு புள்ளி வையுங்கள்.
    3.4
    இதுதான் விடை

    என்னடா இது யோசிப்பதற்குள் விடை வந்துவிட்டதே என்று சந்தேகப்படாதீர்கள். வேண்டுமானால் துணைக்கு ஒரு கால்குலேட்டரை வைத்துக்கொண்டு இந்தக் கணக்குகளை செய்து பாருங்கள்.