Friday, April 25, 2014

குழந்தைகள் உரிமை



குழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;

குழந்தைகள்

மனித கண்ணியத்துடன் வாழும் உரிமை.
பெற்றோரின் பராமரிப்பில் வாழும் உரிமை.
இனம், நிறம், பால், தேசியம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடில்லாமல் வாழும்

இயல்பான உரிமை.

ஆரோக்கியமான முறையில் வளர வசதிகளையும், வாய்ப்புகளையும் பெறும் உரிமை.
ஆளுமையை வளர்க்கக் கல்வி பயிலும் உரிமை.
சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லும் உரிமை.
தேசியத்தைப் பெறும் உரிமை.
சுரண்டலிலிருந்தும், உடல், மனரீதியான கொடுமைகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக உள்ள உரிமை.

குழந்தைகள் சட்டம்

1960 இல் இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது, 1974 இல் இந்திய அரசு குழந்தைகளிக்கான தேசியக் கொள்கையை வெளியிட்டது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது.

குழந்தைகள் சட்டம் வலியுறுத்துவன-;

குழந்தைப் பிறந்தவுடன் பெற்றோர்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யவேண்டும்.
பெயரிட்டபிறகு குழந்தையானது நல்ல குடிமகனாக வளர முறையான பாரமரிப்பு கட்டாயமாகின்றது.
ஒவ்வொரு குழந்தைக்கும் முறையானக் கல்வியும் எத்ர்காலத்தில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்படவேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் நிலை

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் குழந்தைகள். 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.

உலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், உணவு விடுதிகள், செங்கற் சூலைகள், பட்டாசுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏழ்மை, கல்லாமை, சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.

குழந்தை தொழிலாளர்கள்

பெற்றோர்களின் சமூகப் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கைவிடப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் 75 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 103 கோடி இந்திய மக்களில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 18.55 கோடி பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்கள்

திருப்பூர் ஆடைத் தொழிற்சாலையில் 25000 குழந்தைகள் வேலையில் உள்ளனர்.
சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வேலையில் உள்ளனர்.

விசைத்தறிப் பட்டறைகளில் 42 சதவீத குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.
வாரணாசி, ஜெய்ப்பூர்,அலகாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வைரத் தொழிற்சாலைகளில் 2 லட்சம் குழந்தைகள் பணிபுரிகின்றனர்.

ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு

ஐ.நா வின் துணை அமைப்பான உலகத் தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் ஆகிய அமைப்புகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்