Friday, April 13, 2018

திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் புனைப்பெயர் கொண்ட கரிகால் சோழன்


கரிகாலன் சோழன்:


      
சங்க காலத்தை சேர்ந்த சோழ அரசர்களில் மிக முக்கியமான சிறப்புமிக்க அரசன் கரிகால சோழன். இளஞ்செட்சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவர் தான் கரிகாலன் சோழன். தனது முன்னோர்கள் ஆண்ட நிலப்பரப்பை விட சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய பெருமை கரிகாலனுக்கு இருக்கிறது.களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும் வரலாற்று உண்மைகள் வியப்பின் உச்சம். 
காஞ்சி முதல் காவிரி வரை சோழ ராஜ்ஜியம் விரிவடைய காரணமாக இருந்தார் கரிகாலன். சங்ககால சோழர்களில் கரிகாலனுக்கு சமமான, இவரை தாண்டிய புகழுடையவர் வேராரும் இல்லை என்ற பெயரும் கரிகாலனுக்கு உண்டு.

பெயர் காரணம்:

     கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இவருக்கு இப்பெயர்  வந்ததாக வரலாற்று கூற்றுகள்