Friday, July 25, 2014

எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க

எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி ஒரே வரியில் விடை காண முடியும்.

வழிமுறை :

ஒர் எண்ணை 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக அதை சரி பாதியாக்க வேண்டும் (அ) இரண்டால் வகுக்க வேண்டும். மீதி வந்தால் அதை விட்டுவிட்டு ஐந்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும், மாறாக மீதி வரவில்லையெனில்

எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் பெருக்க

"கடைசி மற்றும் கடைசிக்கு முன்னர் இருமடங்கு - The Ultimate and twice the Penultimate" சூத்திரம் மூலமாக எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் சுலபமாக பெருக்க முடியும்.

வழிமுறை :

படி 1 :முதலில் பெருக்க வேண்டிய எண்ணிற்கு இடது பக்கம் சுழியைச் சேர்க்கவும்.
படி 2 :பெருக்க வேண்டிய எண்ணிற்கு வலதுபுறத்திலிருந்து இடப்புறமாக ஒவ்வொர் இலக்கமாக எடுத்து அதை இருமடங்காக்கி அதன் வலது பக்கத்திலுள்ள இலக்கத்துடன் கூட்டி

83516560061 என்ற எண் 19 ஆல் மீதமின்றி வகுபடுமா?

எண்ணின் கடைசி இலக்கத்தை இருமடங்காக்கி (Double the last digit) கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணுடன் கூட்டவும் (சிறிய எண்ணாக வரும் வரை, இதையே பல முறை செய்யவும்). கடைசியாக வரும் விடை 19 எனில், அந்த எண் 19 ஆல் மீதமின்றி வகுபடும்.

உதாரணம் 1: 76 divisible by 19?

76-> 7 + (6X2) -> 19, எனவே 76 ஆனது 19 ஆல் மீதமின்றி வகுபடும்.

உதாரணம் 2: 228 divisible by 19?

228-> 22 + (8X2) -> 38; 3 + (8X2) -> 19, எனவே 76 ஆனது 19 ஆல் மீதமின்றி வகுபடும்.

உதாரணம் 3: 551 divisible b

1 ல் முடியும் எந்த ஓர் எண்ணுக்கான வர்க்கத்தை காணுதல் (Squaring any number ending with 1)

1 ல் முடிவடையும் எண்களின் வர்க்கத்தை கீழ்கண்ட வழிமுறையைப் பயன்படுத்தி மிக சுலபமாக காணலாம்.

வழிமுறை :

படி 1 : கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து '1' னைக் கழித்து அதின் வர்க்கத்தை காண வேண்டும். (எண்ணானது இப்போது பூஜ்ஜியத்தில் முடிவடைவதால் சுலபமாக வர்க்கம் காண இயலும்.)
படி 2 : படி1 ல் வர்க்கம் கண்ட எண்ணையும், வர்க்கம் காண வேண்டிய எண்ணையும் கூட்ட

'25' ல் முடியும் எந்த ஓர் எண்ணுக்கான வர்க்கத்தை காணுதல் (Squaring any number ending with 25)

'25' ல் முடியும் எந்த ஓர் எண்ணுக்கான வர்க்கத்தை கீழ்காணும் எளிய வழிமுறைமூலமாக காணலாம்.

வழிமுறை :

படி 1 : முதலில் வர்க்கம் காண வேண்டிய எண்ணின் கடைசி இரண்டு (வலது பக்கம் உள்ள) இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். அதாவது 25 இன் வர்க்கம் 625, எனவே விடையின் கடைசி பகுதி எப்போதுமே 625 ல் தான் முடியும்.
படி 2 : மீதமுள்ள (கடைசி இரு இலக்கதை விட்டு) இலக்கமானது ஒற்றை படை எண்ணாக

எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் வகுக்க (Any number divided by 5)

எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் வகுக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி ஒரே வரியில் விடை காண முடியும்.

வழிமுறை :

எண்ணை 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக அதை இருமடங்காக்கி அதாவது 2 ஆல் பெருக்கி கிடைக்கும் விடையின் கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும்.

உதாரணம் 1 : 75 / 5 = ?

வழிமுறை :

படி 1 :இங்கு 75 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 75 X 2 = 150, பிறகு கடைசி இலக்கத்திற்கு

நடுவில் பூஜ்ஜியத்தை கொண்டுள்ள எந்த ஓரு மூன்றிலக்க எண்ணுக்கான வர்க்கத்தை காணுதல்

504, 102, 903, 701 போன்ற நடுவில் பூஜ்ஜியத்தை கொண்டுள்ள மூன்றிலக்க எண்ணுக்கான வர்க்கத்தை கீழ்காணும் எளிய வழிமுறைமூலமாக மனதாலேயே சொல்லிவிட முடியும்.

வழிமுறை :

படி 1:   முதலில் வர்க்கம் காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும்.
படி 2:   பின்னர் முதல் மற்றும் கடைசி இலக்கத்தின் பெருக்கல் பலனை இருமடங்காக்க வேண்டும்.
படி 3:   வர்க்கம் காண

பைந்தமிழ் கணிதம்

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. அக்கால தமிழ் பாடல்கள் நம்முடைய புலவர்களின் கணித அறிவினை பரைசாற்றுகிறது.

உருளையின் விட்டம் காண:

ஒரு உருளையின்/ கல்த்தூணின்/மரத்தின் குறுக்கு விட்டத்தினைக் காண்பதற்கான
எளியமுறை : (%99.9 சரியாக இருக்கும் )
"வளையதைக் கிளையதாகி,
கிளையதை எட்டதாக்கி,
எட்டில் மூன்றைத் தள்ளி
நின்றது நெற்றிக்கனம்"
உருளையின் சுற்றளவை நூலில் எடுத்து , முனைகளை சேர்த்து 4 முறை தொடர்ந்து மடித்தால்

தமிழர் கணிதம்

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். 


வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்..
"விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல்"

விளக்கம் :

விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின்

பரிகசிக்கத்தக்க தவறு (Howler)

தவறான கணித நிரூபணம் மூலம் பெறப்பட்ட சரியான முடிவு பரிகசிக்கத்தக்க தவறு (Howler) எனப்படும். கணிதத்தில் போலி (Fallacy) என்பது தவறான நிறுவலைக் குறிக்கும்.

படம் (1)படம் (2)படம் (3)படம் (4)

விளக்கம் :

தப்புக் கணக்கு - மேலே காணும் படத்தில் உள்ள

ஏழால் வகுபடும் தன்மை

வகுபடுந்தன்மை காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தை இருமடங்காக்கி கடைசியிலக்கத்தை தவிர்த்த எண்ணால் கழிக்க வேண்டும். இதையே சிறிய எண் வரும் வரை, திரும்ப திரும்ப செய்ய வேண்டும். விடையானது 7 இன் மடங்காகவோ (குறையெண் அல்லது மிகை எண்) அல்லது பூஜ்யமாகவோ இருந்தால் அவ்வெண்ணாது 7 ஆல் வகுப்படும்.

உதாரணம் 1: எண் 2345, எழால் வகுபடுமா?

விளக்கம் :

படி 1 :எண் 2345 இல் கடைசி இலக்கம் 5 ஆகும், அதை இருமடங்காக்கினால் 5x2=10 வருகிறது, இந்த 10 ஐ, கடைசி

Thursday, July 24, 2014

நான்கால் வகுபடும் தன்மை

ஓர் எண் 4 ஆல் வகுபடுமா, இல்லையா என்பதை கீழ்கண்ட, மூன்று வழிகளில் காணமுடியும்.

   அ. சாதாரண முறை
   ஆ. சுலப முறை
   இ. வேத கணித முறை ("கடைசி மற்றும் கடைசிக்கு முன்னர் இருமடங்கு")

அ.சாதாரண முறை:

உதாரணம் 1: எண் 12345678, நான்கால் வகுபடுமா?

12345678 என்ற எண்ணை சாதாரண முறையில் 4 ஆல் வகுத்து மீதி வரவில்லையெனில் அவ்வெண் 4 ஆல் வகுபடும்.

வழிமுறை :

ஈவு 3086419 மீதி

10 இன் அடுக்கு எண்ணிலிருந்து எந்த ஓர் எண்ணையும் கழிக்க

10 இன் அடுக்கு எண்ணிலிருந்து (அதாவது 100,1000,10000 போன்ற எண்கள்) எந்த ஓர் எண்ணையும் கழிக்க, "எல்லாம் 9 லிருந்து கடைசி மட்டும் பத்திலிருந்து" (All from Nine and last from Ten) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி மிக எளிதாக காண முடியும்.

வழிமுறை :

10 இன் அடுக்கு எண்ணிலிருந்து எந்த ஓர் எண்ணையும் கழிக்க,
1 0 0 0 … – a b c ….n = ( 9 – a )( 9 – b)( 9 – c ) …. (10 – n)
படி 1: கடைசி இலக்கத்தை தவிர மற்ற அனைத்து இலக்கங்களையும் 9 லிருந்து கழிக்க வேண்டும்.
படி 2: கடைசி இலக்கத்தை

கிலோகிராமை பவுண்டாக மாற்ற (Convert Kilograms to Pounds)

கிலோகிராமை பவுண்டாக மாற்ற கீழ்கண்ட சுலபமுறையைப் பின்பற்றி ஏறக்குறைய சரியான விடையை கண்டுபிடிக்கமுடியும்.

வழிமுறை :

படி 1 : கிலோவை இரண்டால் பெருக்கவும்.
படி 2 : படி 1ல் கிடைத்த விடையை 10 ஆல் வகுக்கவும்.
படி 3 : படி 1 ஐயும் படி 2 ஐயும் கூட்ட கிடைப்பது பவுண்டாகும்.


உதாரணம் 1: 86 கிலோகிராம் = எத்தனை பவுண்டு ?

82 x 2 = 172 ...............(1)
172 / 10 = 17.2 ...............(2)
(1)+ (2) ஐயும் கூட்ட 172 + 17.2 = 189.2
எனவே 86 கிலோகிராம் = 189.2 பவுண்டு ஆகும். (சரியான விடை : 189.598)

உதாரணம் 2: 45 கிலோ

கார்ப்ரேகர் எண் (Kaprekar Number)

எண் 6147 ஐ "கார்ப்ரேகர் எண்" என்று அழைக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு, இந்திய கணிதவியலாளர் D.R.Kaprekar என்பவர் இதனை கண்டறிந்தார்.

தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள். பின்னர் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள். பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள். வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள். இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை 6174 என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே

இரு இலக்க எண்ணை 9 ஆல் வகுக்க (Any two digit number divided by 9)

எந்த ஒரு இரண்டு இலக்க எண்ணையும் 9 ஆல் வகுக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி சுலபமாக விடை காண முடியும்.


வழிமுறை :

படி 1 :வகுபடும் எண்ணின் முதல் இலக்கமானது ஈவு (Quotient) ஆகும்.
படி 2 :பின்னர் வகுபடும் எண்ணின் முதல் இலக்கத்துடன் இரண்டாவது இலக்கத்தைக் கூட்ட வரும் விடையானது மீதி ஆகும்.

(குறிப்பு: மீதியானது 9 ஐ விட சிறியதாக இருந்தால் அதுதான் மீதி, மாறாக 9 க்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தால் அதிலிருந்து 9ஐ கழிக்க கிடைப்பது மீதியாகும் அவ்வாறே

ஒன்பதாம் வாய்ப்பாடு – உங்கள் கையில் | Finger Multiplication of 9 Time Table

தங்களுடைய இரு கைகளைப் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்பாட்டினை மிக சுலபமாக காண முடியும். உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

வழிமுறை :

படி 1 :உங்கள் இரு கைகளையும் விரல்கள் தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.
படி 2 :இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.
படி 3 :எந்த எண்ணை ஒன்பதால் பெருக்க வேண்டுமோ அந்த எண் கொண்ட விரலை மடக்கிக் கொள்ளவும்.
படி 4 :பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் விடை.


உதாரணம் 1: 9 X 3 = ?

விளக்கம் :

படத்தில் உள்ளது போல

பெருக்கல் (இரட்டிப்பாக்குதல் மற்றும் பாதியக்குதல் முறை - Doubling and Halving)

இரண்டு எண்களைப் பெருக்கும் போது, அதில் ஏதாவதொரு எண் இரட்டைப் படை எண்ணாக இருந்தால் "இரட்டிப்பாக்குதல் மற்றும் பாதியக்குதல்" முறை மூலம் சுலபமாக விடை காணமுடியும்.

வழிமுறை :

படி 1 : முதலில் பெருக்க வேண்டிய எண்ணை எடுத்துக்கொண்டு, அதிலுள்ள இரட்டைப்படை எண்ணை பாதியாக்கவும்(Halve) , மற்றொரு எண்ணை இரண்டின்

மனதை அறியும் மாயம் - விளையாட்டு (Mind Reader - Magic)

வழிமுறை :

படி 1 :இரண்டு இலக்க எண் ஒன்றை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். (உதாரணம் : 34)
(Think of a two digit number)
படி 2 :அந்த எண்ணின் கூட்டுத்தொகையை நீங்கள் நினைத்த எண்ணிலிருந்து கழிக்கவும். (உதாரணம் :34-(3+4)= 27).
(Add the two digits together and subtract from your original number.)
படி 3 :படி 2ல் கிடைத்த விடையை, கீழ் காணும் படம்(1) எண்ணின் வலது பக்கமுள்ள குறியீட்டை

எந்த ஒர் எண்ணையும் 16 ஆல் பெருக்க

எந்த ஒர் எண்ணையும் 16 ஆல் பெருக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி சுலபமாக விடை காண முடியும்.

வழிமுறை :

முதலில் 16 ஆல் பெருக்க வேண்டிய எண்ணை 10 ஆல் பெருக்கவும், பிறகு பெருக்கி வந்த விடையின் பாதியை கண்டு பிடிக்கவும். பின்னர் இவ்விரு விடையுடன் பெருக்க வேண்டிய எண்ணையும் கூட்டினால் கிடைப்பது விடையாகும். இந்த முறையை திரும்ப திரும்ப செய்வதன் மூலம், பேப்பர், எழுதுகோல் இல்லாமால் மனதாலேயே சொல்லமுடியும்.

உதாரணம் 1: 16 X 24 = ?

4 X 10 = 240 ..... [1]
240/2 = 120 ..... [2]
[1] + [2] + பெருக்க வேண்டிய எண் = 240 + 120 + 24 = 384

வழிமுறை :

படி 1 :24 ஐ 10 ஆல் பெருக்க, 24 X 10 = 240.

தமிழர் கணிதம் - வட்டத்தின் பரப்பளவு

கணக்கு பாடங்களில் நம் நாட்டு மாணவர்கள் மற்ற நாட்டு மாணவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள், எப்படி என்றால்,மற்ற நாடுகளில் பள்ளிக்குச் சென்று முறையாகக் கற்றால்தான் கணிதம் பயிலமுடியும். ஆனால் இந்தியாவில் சில நடைமுறைப் பயிற்சிகளாலேயே பாமரர்கள்கூடக் கணக்கில் புலிகளாக உலா வருவதைக் காண்கிறோம்.

வட்ட வடிவ நிலத்தின் பரப்பளவை காண, "காக்கைப்பாடினியம்" என்ற தொன்மையான நூலில் செய்யுள் வடிவிலேயே விளக்கியுள்ளனர்.
"வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
சட்டெனத் தோன்றுங் குழி."

           -காக்கைப் பாடினியம். (46 - 49)

விளக்கம் :


இதன்படி

எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11)

எந்த ஒரு எண்ணையும் 11 ஆல் பெருக்க, "கடைசி பதம் மட்டும்" (Only the last terms) சூத்திரமூலமாக மிக எளிதாக, ஓரு வரியிலேயே விடை காணமுடியும்.

அ. முதலில் இரண்டு இலக்க எண்களை 11 ஆல் பெருக்குவது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

உதாரணம் 1: 81 x 11 = ?

=8 (8+1) 1
=891

வழிமுறை :

படி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (8+1=9)
படி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை

கூட்டல் முறையில் கழித்தல் (Subtraction by Addition)

"எல்லாம் 9 லிருந்து கடைசி மட்டும் 10 லிருந்து" ( All from 9 and Last from 10 ) சூத்திரமூலமாக மிக கடினமான கழித்தல் கணக்குகளை மிக எளிதாக காண முடியும்.

   89765-----------------[1]
   38799-----------------[2]
  --------------------------
(-)
  --------------------------
முதலில் கழிக்க வேண்டிய எண்ணிலுள்ள [2] கடைசி இலக்கத்தை தவிர மற்ற அனைத்து இலக்கங்களையும்(இடமிருந்து வலமாக) 9 ஆல் கழித்து, கடைசி இலக்கத்தை மட்டும் 10 ஆல் கழிக்க கிடைக்கும் எண்ணுடன் முதல் எண்ணைகூட்ட அதாவது கழிபடும் [1]எண்ணுடன் கூட்ட கிடைத்த விடையின் இடதுபக்க கடைசி இலக்கத்தை நீக்க கிடைப்பது விடையாகும்.
இங்கேயும் நாம் "எல்லாம் 9 லிருந்து

எண் ஏழு (Number 7)

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது. 

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007 
2. எழு குன்றுகளின் நகரம் ரோம் 
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு

மேஜிக் ஒன்பது (Magic Nine)

எண் ஒன்பதை எண்களின் அரசன் என்றும் அழைப்பர். ஓர் எண்ணை 9,99,999.....போன்ற தொடர் எண்களால் பெருக்க "முன்னதை விட ஒன்று குறைவாக" (By One Less than the Previous one) என்கிற சூத்திரத்தை பயன்படுத்தி விரைவாக காணலாம்.

அ) கொடுக்கப்பட்ட இரு எண்களின் இலக்கங்களும் சமமாக இருந்தால்

உதாரணம் 1: 92 x 99 = ?

92 x 99 இதில் இரு எண்களிலும் இரண்டு இலக்கங்கள் உள்ளது.

இடது பக்க விடை : 92 லிருந்து 1 ஐ கழிக்க ("முன்னதை விட ஒன்று குறைவாக") 92 - 1 = 91
வலது பக்க விடை : அடிப்படை எண் 100 லிருந்து 92 ஐ கழிக்க 100 - 92 = 08
= (92 -1 ) / (100 - 92)
= 91 / 08
= 9108

வழிமுறை :

படி 1 : முதல் எண்ணிலிருந்து 1 ஐ கழிக்க (இடது பக்க எண்ணிலிருந்து "முன்னதை விட

12345678987654321 என்ற எண் 9 ஆல் வகுபடுமா?

ஓர் எண் 9 ஆல் வகுபடுமா என்பதை மூன்று வழிகளில் காணமுடியும்.

   அ. சாதாரண முறை
   ஆ. எண்ணிலுள்ள இலக்கங்களின் கூடுதல் 9ஆல் வகுபட்டால் அந்த எண் 9 ஆல் வகுபடும்
   இ. அடித்தல் முறை (சுலபமான முறை)

அ.சாதாரண முறை:

12345678987654321 என்ற எண்ணை சாதாரண முறையில் 9 ஆல் வகுத்து மீதி வரவில்லையெனில் அவ்வெண் 9 ஆல் வகுபடும்.

வழிமுறை :

ஈவு 1371742109739369 மீதி 0, எனவே 12345678987654321 ஆனது 9 ஆல் வகுப்படும்.

ஆ.எண்ணிலுள்ள

எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் பெருக்க

"கடைசி மற்றும் கடைசிக்கு முன்னர் இருமடங்கு - The Ultimate and twice the Penultimate" சூத்திரம் மூலமாக எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் சுலபமாக பெருக்க முடியும்.

வழிமுறை :

படி 1 :முதலில் பெருக்க வேண்டிய எண்ணிற்கு இடது பக்கம் சுழியைச் சேர்க்கவும்.
படி 2 :பெருக்க வேண்டிய எண்ணிற்கு வலதுபுறத்திலிருந்து இடப்புறமாக ஒவ்வொர் இலக்கமாக எடுத்து அதை இருமடங்காக்கி அதன் வலது பக்கத்திலுள்ள இலக்கத்துடன் கூட்டி எழுத வேண்டியதுதான். [Carry over வந்தால் அடுத்த எண்ணுடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.]

உதாரணம் 1: 23 X 12 = ?

Step 1: 023
Step 2: 3X2 + 0 = -----------------6
(From right to left, Dobule the first digit. i.e., 3X2=6 then add its immediate right digit. There is no immediate digits, so we add zero. so, 6+0=6)
Step 3: 2X2 + 3 = -----------------7
(From right to left, Dobule the second digit. i.e., 2X2=4 then add its immediate right digit. so, 4+3=7)
Step 4: 0X2 + 2 = -----------------4
(From right to left, Dobule the second digit. i.e., 0X2=0 then add its immediate right digit. so, 0+2=2)

23 X 12 = 276

விளக்கம் :

படி 1 :முதலில் பெருக்க வேண்டிய எண்ணிற்கு இடது பக்கம் சுழியைச் சேர்க்கவும். அதாவது 0276.
படி 2 :எண்ணிற்கு வலபுறத்திலிருந்து இடப்புறமாக

கிழமையை கண்டுபிடித்தல் (Day of the week of any date)

10,000 வருடத்திற்கான அசத்தல் நாள்காட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய மனதாலேயே எந்தவொரு தேதியிக்கான கிழமையை கண்டுபிடிக்க ஒரு பொதுவான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிழமைக்கான சூத்திரம் = ( D + M + Y + [Y/4] ) mod 7.
இங்கு,

D=தேதி
M=மாதத்திற்கு உண்டான எண்
Y=வருடத்தின் கடைசி இரு இலக்கங்கள்
[Y/4] = வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பு
மாதத்திற்கான எண்கள்(அட்டவணை-1)
 
கிழமைகான எண்கள்(அட்டவணை-2)
மாதம்                 எண் 
Year <2000
Year>=2000
  
கிழமை
வகை-Iவகை-II
ஜனவரி1/0*சனி01
பிப்ரவரி4/3*ஞாயிறு12
மார்ச்4திங்கள்23
ஏப்ரல்0செவ்வாய்34
மே2புதன்45
ஜுன்5வியாழன்56
ஜுலை0வெள்ளி60
ஆகஸ்ட்3   
செப்டம்பர்6   
அக்டோபர்1   
நவம்பர்4   
டிசம்பர்6   

* லீப் வருடமாக இருந்தால் ஜனவரி-0 என்றும், பிப்ரவரிக்கு-3 என்றும் கொள்க.

உதாரணம் 1

உங்கள் நன்பரின் பிறந்த நாள் 30-01-1985 என்று வைத்துக் கொள்வோம்.

கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (30 + 1 + 85 + 21) mod 7
= 137 mod 7      137 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 4.
எனவே, உங்கள் நன்பர் பிறந்த தினம் புதன் கிழமை ஆகும். (குறிப்பு : பிறந்த வருடமானது 2000 க்கு குறைவாக உள்ளது. எனவே அட்டவணை-2 ல் வகை-I ல் பார்க்கவும்)

விளக்கம் :

படி 1 : முதலில் பிறந்த தேதியை எடுத்துக்கொள்ள