Friday, May 25, 2018

அறிவின் மறுவடிவம் புத்தர்:

‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி

Saturday, May 19, 2018

இராஜேந்திர சோழன்


இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன்
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், சிங்கப்பூர், மலேசியா, சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல்

Friday, May 18, 2018

மனிதருள் மாமனிதன் சே குவேரா (Ernesto Guevara de la Serna)

“சே” என்னும் புரட்சித் தீ பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது பல தோழர்கள் அணிந்துகொண்டிருக்கும் டிசர்ட்கள்தான்.  
 யார் இவர் என தேடத்தொடங்கினேன் இந்த வரலாற்று நாயகனை. அவரைப் பற்றிய புத்தகங்கள், மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இன்று “சே”வை நேசிக்கும் பல்லாயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன்.     
   
பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்.
 சே தொடர்பான “சே வாழ்வும் புரட்சியும்” என்ற ஆவணப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. “சேகுவேரா வாழ்வும் மரணமும்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வெறும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட சே குவேராவினை ஒளிப்பேழையில் பார்த்தேன். அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான சிரிப்பு மிடுக்கான தோற்றம் இவை “சே”வின் அடையாளங்கள். உலகெங்கும் உள்ள விசிறிகள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றார்கள். 
நெல்சன் மாண்டேலா “சே சாதித்ததை எந்த தணிக்கையும் அல்லது எந்த ஒரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனுக்கும் அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தரவல்லது. அவரின் நினைவுகளை நாம் எப்போதும் போற்றுவோம்”