Sunday, October 27, 2013

பெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க அருமையான 2 Softwares :

பெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க A Maths Games of Multiplication, Multiplication 101 என்கிற Softwares துணைபுரிகிறது.

1. A Maths Games of Multiplication இதில் 1 முதல் 10 வாய்பாடுகள் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் எளிமையாக கற்கவும், கற்றதை மனதில் பதியவைக்கவும் முடிகிறது.
மாணவர்கள் சரியாக செய்தால் Robo போன்ற உருவம், Correct, Verygood,, Great Job, God Job, Wonderful போன்ற Comments கொடுப்பதால், ஒவ்வொரு முறையும் நாம் சரியாக செய்தோம் என்ற மகிழ்ச்சி மாணவர்கள் மனதில் ஏற்படுகிறது.
மேலும் கற்கும் மனநிலை மாணவர்கள் மனதில் ஏற்படுகிறது. தவறாக செய்தால், எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கமும் தருகிறது. ஒவ்வொரு வாய்பாட்டின் முடிவிலும் Your Answer Correctly : _ Questions out of _ . என Result காட்டப்படுகிறது. மதிப்பெண் குறைவாக பெற்றால் Repeat Problem Questions எனவும், முழுமையாக செய்ய Play Again எனவும், அனைத்தும் சரியாக செய்தால் More Quizzes எனவும்வருகிறது. More Quizzes என்பதை கிளிக் செய்தால் முதன்மை பக்கத்தைக் காட்டும். அதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை கிளிக் செய்து அடுத்த வாய்பாட்டிற்கு செல்லலாம். இதை முடித்த பிறகு எந்த வாய்பாட்டில் எப்படி மாற்றி கேட்டாலும் விடையளிக்கும் திறனை மாணவர்கள் பெறுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

2. இதே போல்Multiplication 101 என்கிற Software பெருக்கலை எளிமையாக செய்ய துணைபுரிகிறது. இதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டால் அதில் மாற்றி மாற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். 10 வினாக்களுக்கும் சரியாக பதில் அளித்தால் பெரிய கைத்தட்டல் கிடைக்கும்.
இதுவும் மாணவர்களின் பெருக்கல் திறனை வளர்க்க பெரிதும் உதவுகிறது.
இவற்றை நீங்களும் உங்கள் பள்ளியில் பயன்படுத்தி பார்த்து எப்படி உள்ளது என தங்களின் மேலான கருத்துக்களை பகிருங்கள் ஆசிரிய நண்பர்களே! வேறு ஏதேனும் நல்ல Software  இருந்தால் தெரியபடுத்தவும் . இதை பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள் பல.


Thanks . Thank you very much. Have nice day.






Sunday, October 20, 2013

FULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி

தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள்,
வழிகாட்டு கவுன்சிலர்கள், பாடத்திட்ட சிறப்பாளர்கள், சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நவம்பர் 20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/Distinguished-Fulbright-Awards-Teaching-Program.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி - இறந்த அரசு ஊழியரின் வாரிசு நியமனம் குறித்த விதி 30ல் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு உத்தரவு

இராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிகளில் (Army Public School-APS)  ஆசிரியராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: B/45706/CSB-13/AWES
பணிகள்:
1.Post Graduation Teachers (PGT)
2.Trained Graduate Teachers (TGT)
3.Primary Teachers (PRT)
கல்வித்தகுதி:
(PGT) 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஆங்கிலம், இந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உயரி தொழில்நுட்பவியல், உளவியல் வணிகவியல், கணினி அறிவியல், தகவல் தொழிற்நுட்ப அறிவியல், மனை அறிவியல் (Home Science) உடற்கல்வியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

ஆங்கிலம் SINGULAR - PLURAL (ஒருமை - பன்மை)

5 ஆம் வகுப்பு கணக்கு இரண்டாம் பருவம் - சமசீர் தன்மை கற்பிக்க உதவும் இணைய தளங்கள்

எளிய வழியில் ஆங்கிலம் கற்க - Silent letters in the English language

ஆங்கிலம் - Silent letters in the English languageSilent Letters

அடிப்படைச் செயல்களை ஆர்வத்துடன் கற்க அருமையான software.

ஆசிரியர் நண்பர்களுக்கு அன்பான வணக்கம்.
மாணவர்களின் கணித அறிவை வளர்க்க அடிப்படைச்செயல்கள் (கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ) மிக அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை ஆர்வத்துடன் கற்க Math Educator என்கிற software உதவி செய்கிறது.
எங்கள் பள்ளியில் (ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி – பொன்பத்தி. செஞ்சி ஒன்றியம். விழுப்புரம் மாவட்டம். ) மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை திறமையாக செய்ய பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் இந்த Math Educator.
 இவற்றைப் பயன்படுத்தி கணினியின் மூலம் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுகின்றனர். வாரத்தில் ஒருநாள் (வெள்ளிக்கிழமை) இதற்காக பயன்படுத்துகிறோம். இதைப் பயன்படுத்தி கற்றலில் ஈடுபடும் போது மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் கற்கின்றனர். இதன் பிறகு தன்னம்பிக்கையுடன் கணித வகுப்பில் செயல்படுகின்றனர்.
பயன்படுத்தும் முறை:
இதில் Addition(கூட்டல்), Subtraction(கழித்தல்), Multiplicationபெருக்கல்), Division(வகுத்தல்) என நான்கு பிரிவுகள் உள்ளது.இதில் ஒவ்வொரு பிரிவிலும்  Level 1, Level 2, Level 3 என மூன்று உட்பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு Level –லிலும் 10 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு option கொடுக்கப்படுகிறது. சரியான விடையை Click செய்தவுடன் சரியாக இருந்தால் Correct என்றும்,
தவறாக இருந்தால் Wrong என்றும் பதிலளிக்கும். 10 வினாக்களுக்கு விடையளித்தப்பின் எத்தனை மதிப்பெண்கள் பெற்றனர் என்ற விவரம் கொடுக்கிறது. இதனால் அவர்களின் திறமையை அவர்களே கண்டறிந்து செயல்படுகின்றனர். நீங்களும் இந்த software – ரை Download செய்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தியப் பின்  தங்களின் மேலான கருத்துக்களைப் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  இந்த Software – யை Download செய்ய கீழே உள்ள Link – கை கிளிக் செய்யவும்.



ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் எப்படி செயல்படுகின்றன?

நீங்கள் பயன்படுத்தும் எந்த வகை கம்ப்யூட்டராக இருந்தாலும் கண்டிப்பாக அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்தியே ஆக வேண்டும். அப்படி பயன்படுத்தவில்லை என்றால் உங்களுடைய கணினி பாதுகாப்பில்லாமல் இயங்கும். இதனால் விரைவிலேயே கணினியில் உள்ள கோப்புகள் வைரசால் பாதிக்கப்பட்டுவிடும். சில நேரங்களில் கணினியை முடங்கிப்போகும். 

இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கு ஒவ்வொரு கணினிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவசியம் தேவை. 

வைரஸ் பரவும் வழிமுறைகள்: 


Activities-of-antivirus-programsஇணையம் வழியாக வரும் வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் கணினியைத் தாக்கி, அதன் தன்மைக்கேற்ப பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. 
கோப்புகளை சேமித்து  பரிமாற்றம் செய்துகொள்ளப் பயன்படும் Flash Drive வழியாகவும் இதுபோன்ற மால்வேர், வைரஸ் புரோகிராம்கள் கணினிக்கு பரவுகின்றன. 

எனவேதான் கம்ப்யூட்டரு ஒரு இன்றியமையாத புரோகிராமாக மாறிவிட்டது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். 

ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் இயக்கம்: 


ஆண்ட்டி வைரஸ் புரோகிராமானது உங்கள் கணினியில் பல நிலைகளில் இயங்குகிறது. கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்குதல்கள் பல்வேறு வழிகளில் நடைபெறுகிறது என்றாலும் , குறிப்பாக பிரௌசர்களின் வழியாக எளிதாக கம்ப்யூட்டரை வந்தடைகின்றன. ப்ளக் இன் புரோகிராம்கள், வல்னெரபிள் - வழுக்கள் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவைகளுக்காக உங்களுக்கு ஒரு திறன்மிகு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தேவை. 

கம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு

functions-of-all-function-keys-in-computer-keyboardகம்ப்யூட்டரில் எண் வரிசை விசைகளுக்கு மேலே இருப்பது ஃபங்சன் கீ வரிசை. இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் இரண்டு விசைகள் F1 மற்றும் F5. 

இணையத்தைப் பயன்படுத்தும்போது மட்டும் பெரும்பாலும் F5 விசையை மட்டும் பயன்படுத்துவோம். இது வலைப்பக்கத்தை மீள் தொடக்கம் (Refresh) செய்வதற்குப் பயன்படும். 

மற்ற விசைகளும் இதைப்போன்று பயன்மிக்க பயன்பாடுகளைக் கொண்டதுதான்.

ஒவ்வொரு விசையும் எதற்கு எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொண்டால் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். எதையும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகிவிடும்.  

பிறகு உங்களுக்கும் விரைவாக பிரௌசிங் செய்வது, விரைவாக கணினியைக் கையாள்வது எளிமையாகிவிடும்.

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்


அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 
>


சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.

அதன் பிறகு, 1997-ஆம் ஆண்டு கோவை, சிங்காநல்லூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் அரசு வேலை கிடைத்ததும் அங்கு பணியில் சேர்ந்தேன். பிறகு, 10 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு வழங்கக்கூடிய தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து 1999-ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது

Thursday, October 17, 2013

ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தப் படும் 100 வார்த்தைகள்

ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் திட்டம்

       

   அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும்ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

             இத்திட்டத்தின் மூலம்பயன்பெற அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவியாளர் மூலம் பெண்கல்வி ஊக்குவிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகம் மூலம் பெற்று, பூர்த்தி செய்து,மாணவியின் சாதிச்சான்று அல்லது வட்டாட்சியர் சான்று இணைத்து, திரும்ப அனுப்ப வேண்டும்.அனுமதிக்கப்படும் ஊக்கத்தொகை மாணவிகளின் பெயரில் உள்ளவங்கிக் கணக்கு அல்லதுமாணவியரின் தாய் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கு எண்ணில் செலுத்தப்படும்.

சித்த மருத்துவம், ஓமியோபதி மருத்துவப்படிப்பில் சேர கலந்தாய்வு சென்னையில் 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது

சித்தமருத்துவம், ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, நேச்சிரோபதி ஆகிய படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் 21–ந்தேதி 
முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது.
இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கலந்தாய்வு 
2013–2014–ம் ஆண்டுக்கான சித்தமருத்துவம், ஓமியோபதி, யுனானி, நேச்சுரோபதி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தமருத்துவ கல்லூரியில் 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வு மத்திய அரசின் அனுமதியையும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக இருக்கை அனுமதியையும் ஒருசேர பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு மட்டுமே ஆகும்.
தகுதியான கல்லூரிகள் பட்டியல் கலந்தாய்வு நடைபெறும் 21–ந்தேதி தெரிவிக்கப்படும்.

மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: தமிழக வருவாய் துறை முதன்மை செயலர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது," என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

          கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் மின் ஆளுமை திட்டப்பணிகளை தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர் ராஜேஷ் முன்னிலையில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் நில அளவைத்துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:"வருவாய் துறையில் ஜாதிச்சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடியிருப்பு சான்றிதழ்கள் ஆகியவை மக்கள் கணினி மையங்கள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து பெறலாம். 

Saturday, October 12, 2013

மடிக்கணினியை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!

கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல்கணினி போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கணினியைப் பயன்படுத்தும்
பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில் படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில்

தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

தபால்வழியில் பி.எட். படிப்புமதுரை காமராஜர்திருச்சி பாரதிதாசன்கோவை பாரதியார்தஞ்சை தமிழ்நெல்லை மனோன்மணீயம்சிதம்பரம் அண்ணாமலைதமிழ்நாடு திறந்தநிலை என குறிப்பிட்ட சில
பல்கலைக்கழகங்கள் மட்டுமே தபால்வழியில் பி.எட். படிப்புகளை வழங்குகின்றன. இதேபோல் மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும்

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு

CCE 2nd TERM WEEKLY SYLLABUS

Tuesday, October 8, 2013

ஆங்கில ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் ஒரு மாதம் பயிற்சி

        நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 முடிய ஒரு மாத காலம் ஆங்கிலப்பாடப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் உள்ள ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் "ஆங்கிலம் கற்பித்தலில் சான்றிதழ்" என்ற பணியிடைப் பயிற்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.


           மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் தெரிவு செய்து பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைப் பட்டியலிட்டு அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னுரிமையளித்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
           சார்ந்த ஆசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலமாக இதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே பெங்களூரு மையப் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தாலும் சனி, ஞாயிறு, அரசு விடுமுறை, விழாக்கால விடுமுறை போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் நடத்தப்படும் என்பதால் ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளச் சுணக்கம் காட்டுவர்.

நவீனமாகிறது கல்வித்துறை: மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்

         இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

        மேகவழிக் கல்வி முறை என்பது கணினிகளின் இணைப்புகள் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு புதுமையான கல்விமுறை ஆகும். இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலிருந்தபடியே எந்த ஒரு பள்ளியோடும் அதன் மாணவர்களுடனும் பாடங்களை பகிர்ந்துக் கொள்ள முடியும்.

               தங்களின் பாடங்கள் சம்மந்தமான தகவல்களை அவர்கள் பள்ளியில் உள்ள கணினி, மடிக்கணினி,செல்பேசி ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஒரு குறிப்பிட்ட மென்பொருளை தங்களது கணினி மற்றும் செல்பேசிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும்.

10th New Tamil Study Material For Slow Learners.

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி

            கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.


சான்றிதழ் உண்மையானதுதானா?

          எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.

         அந்த சான்றிதழ் நகலை தன்வசம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு தேர்வுத்துறை ஆராய்ந்து அறிக்கை அனுப்பும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள் போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தது இத்தகைய ஆய்வின் மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

10th Public Exam Question - September - 2013 Now Available

TN GOVT SERVANTS - FUNDAMENTAL - CONDUCT - DISCIPLINE & APPEAL RULES

PGTRB 2013 Result & Final Answer Key Now Available

Monday, October 7, 2013

பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

    தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்த சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கணினிக்கு அடுத்த தற்பொழுது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் டேப்ளட் பி.சி கள்கையடக்கத் தொலைபேசியான ஆண்ட்ராய்ட் மொபைல்கள் போன்றவற்றிற்கும் கல்வித் தொடர்பான புதிய அப்ளிகேஷன்கள் வரத்துவங்கியுள்ளன. Ntional Council of Educational Research and Training என்ற அமைப்பின் கீழ் வரும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் (ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) அனைத்தும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

NCERT-android-App-for-school-students-1to-12

          என்.சி.ஆர்.டி அமைப்பின் கீழ் வரும் அனைத்து புத்தகங்களையும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் படிக்கலாம்.

பயன்மிக்க இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய:

Download NCERT App for school students

நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்

மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. 

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து, வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தது 100 மாணவர்கள் பயில வேண்டும். கணிதத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) தயாராக தனி பாடம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாண வர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. 

இதற்காக, பி.எட். படிப்பில் இருப்பதைப் போல இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான புதிய தாள் சேர்க்கப்படும். 

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணியிலோ, பட்டதாரி ஆசிரியர் பணியிலோ சேர முடியும்.

2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான (SABL) - SSA வின் அறிவுரைகள்

D.T.Ed + B.A(TAMIL ), B.Lit or TPT, D.T.ED + B.LIT மற்றும் D.T.Ed + B.A (English) ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் B.Ed கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.

புதிய மருத்துவ காப்பீடு சம்பந்தமான புகார்களை தெரிவிப்பது தொடர்பான அலுவலர்களை மாற்றி அரசாணை வெளியீடு

தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு:கல்வியாளர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷ் அபியான்) துவக்கப்பட்டது.

கட்டமைப்பு வசதிகள்:அதன் நோக்கம், ஆறு முதல், 14 வயதுடைய குழந்தைகள் அனைவரும், இடைநிற்றல் இன்றி, ஆரம்பக் கல்வியை முடிக்க வேண்டும். மேலும், 1 கி.மீ., தூரத்துக்குள், ஒரு தொடக்கப் பள்ளியும், 3 கி.மீ., தூரத்துக்குள், ஒரு நடுநிலைப் பள்ளியும் துவங்கப்பட்டு, அதற்கு தேவையான கட்டடம், கழிப்பறை, உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி, கற்பித்தலுக்குத் தேவையான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.