Friday, December 26, 2014

முக்கோணத்தின் வகைகளை அறிதல் FA Activity


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி – பொன்பத்தி

பாடம்:கணக்கு                                                       வகுப்பு: 8              

கற்கும் திறன்: முக்கோணத்தின் வகைகளை அறிதல்.

மாணவர்கள் இரு குழுகளாக பிரிந்து குச்சிகள் , பட்டைகள் மற்றும் ஆணிகளைக் கொண்டு முக்கோணத்தின் வகைகளைச் செய்து காட்டினர்.

பக்கங்களின் அடிப்படையிலான முக்கோணங்களை ஒரு குழுவும் (சமபக்க முக்கோணம், இருசமபக்க முக்கோணம், அசமபக்க முக்கோணம்)


கோணங்களின் அடிப்படையிலான முக்கோணங்களை மற்றொரு குழுவும் (குறுங்கோண முக்கோணம்,செங்கோண முக்கோணம் மற்றும் விரிகோண முக்கோணம்) அமைத்தனர்.
மாணவர்களால் செய்யப்பட்ட முக்கோணங்களை மேசையின் மீது வைத்து ஒரு குழு கோணத்தின் பெயரைக் கூற, மற்றொரு குழு சரியான முக்கோணத்தை எடுக்கச் செய்தல். இவ்வாறு செய்து கற்பதன் மூலம் நிலையான கற்றல் திறனைப் பெற இயலும். தானே செய்து கற்பதால் மாணவர்களின் தன்னம்பிக்கை வளரும்.

                             பா.சத்தியவேல் பட்டதாரி ஆசிரியர்,

                             ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி - பொன்பத்தி.

BEd பட்டம் அனைத்து பாடங்களுக்கும் பொதுவானது! - RTI Letter