Wednesday, June 24, 2015

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் நம்மிடம் பணம் பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீடு திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான்

பெயர் மாற்றம் செய்வது எப்படி?

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், கூப்பிடுவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற விரும்புவதும் உண்டு. ஒருவர் தன் பெயரை நியூமராலஜிபடியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ் பெயரையோ வைத்துக் கொள்ள விரும்பலாம். தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என தெரிந்துகொள்வோம்.
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
  • தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால்