Thursday, July 24, 2014

கிழமையை கண்டுபிடித்தல் (Day of the week of any date)

10,000 வருடத்திற்கான அசத்தல் நாள்காட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய மனதாலேயே எந்தவொரு தேதியிக்கான கிழமையை கண்டுபிடிக்க ஒரு பொதுவான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிழமைக்கான சூத்திரம் = ( D + M + Y + [Y/4] ) mod 7.
இங்கு,

D=தேதி
M=மாதத்திற்கு உண்டான எண்
Y=வருடத்தின் கடைசி இரு இலக்கங்கள்
[Y/4] = வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பு
மாதத்திற்கான எண்கள்(அட்டவணை-1)
 
கிழமைகான எண்கள்(அட்டவணை-2)
மாதம்                 எண் 
Year <2000
Year>=2000
  
கிழமை
வகை-Iவகை-II
ஜனவரி1/0*சனி01
பிப்ரவரி4/3*ஞாயிறு12
மார்ச்4திங்கள்23
ஏப்ரல்0செவ்வாய்34
மே2புதன்45
ஜுன்5வியாழன்56
ஜுலை0வெள்ளி60
ஆகஸ்ட்3   
செப்டம்பர்6   
அக்டோபர்1   
நவம்பர்4   
டிசம்பர்6   

* லீப் வருடமாக இருந்தால் ஜனவரி-0 என்றும், பிப்ரவரிக்கு-3 என்றும் கொள்க.

உதாரணம் 1

உங்கள் நன்பரின் பிறந்த நாள் 30-01-1985 என்று வைத்துக் கொள்வோம்.

கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (30 + 1 + 85 + 21) mod 7
= 137 mod 7      137 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 4.
எனவே, உங்கள் நன்பர் பிறந்த தினம் புதன் கிழமை ஆகும். (குறிப்பு : பிறந்த வருடமானது 2000 க்கு குறைவாக உள்ளது. எனவே அட்டவணை-2 ல் வகை-I ல் பார்க்கவும்)

விளக்கம் :

படி 1 : முதலில் பிறந்த தேதியை எடுத்துக்கொள்ள
வேண்டும். (30)
படி 2 : ஜனவரி மாதத்திற்கு உண்டான எண்ணை அட்டவனை 1 ஐ பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். (1)
படி 3 : பிறந்த வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். (85)
படி 4 : பிறந்த வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி மதிப்பை விட்டுவிடவும். (85/4=21 ignore reminder)
படி 5 : மேற்படி கிடைக்கும் எண்களிண் கூடுதலை (30 + 1 + 85 + 21) 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதியை அட்டவணை-2 ல் ஒப்பிட்டு பார்த்து கிழமையை கண்டுபிடிக்கவும்.

உதாரணம் 2

வரப்போகும் 01-01-2015 க்கான கிழமை என்ன என்பதைப் பார்ப்போம்.

கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (1 + 1 + 15 + 3) mod 7
= 20 mod 7     20 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 6.

எனவே, 01-01-2015 தேதிக்கான கிழமை வியாழன் ஆகும். (குறிப்பு : வருடமானது 2000 க்கு அதிகமாக உள்ளது. எனவே அட்டவணை-2 ல் வகை-II ல் பார்க்கவும்)

விளக்கம் :

படி 1 : முதலில் தேதியை எடுத்துக்கொள்ள வேண்டும். (1)
படி 2 : ஜனவரி மாதத்திற்கு உண்டான எண்ணை அட்டவனை-1 ஐ பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். (1)
படி 3 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். (15)
படி 4 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி மதிப்பை விட்டுவிடவும். (15/4=3 ignore reminder)
படி 5 : மேற்படி கிடைக்கும் எண்களிண் கூடுதலை (1 + 1 + 15 + 3) 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதியை அட்டவணை-2 ல் ஒப்பிட்டு பார்த்து கிழமையை கண்டுபிடிக்கவும்.

உதாரணம் 3

இந்தியா சுதந்திர தினம் : 15-08-1947

கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (15 + 3 + 47 + 11) mod 7
= 76 mod 7     76 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 6.

எனவே, இந்தியா சுதந்திரம் அடைந்தது வெள்ளி கிழமை ஆகும். (குறிப்பு : வருடமானது 2000 க்கு குறைவாக உள்ளது. எனவே அட்டவணை-2 ல் வகை-I ல் பார்க்கவும்)

விளக்கம் :

படி 1 : முதலில் தேதியை எடுத்துக்கொள்ள வேண்டும். (15)
படி 2 : ஆகஸ்டு மாதத்திற்கு உண்டான எண்ணை அட்டவனை-1 ஐ பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். (3)
படி 3 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். (47)
படி 4 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி மதிப்பை விட்டுவிடவும். (47/4=11 ignore reminder)
படி 5 : மேற்படி கிடைக்கும் எண்களிண் கூடுதலை (15 + 3 + 47 + 11) 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதியை அட்டவணை-2 ல் ஒப்பிட்டு பார்த்து கிழமையை கண்டுபிடிக்கவும்.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்