Sunday, November 10, 2013

கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை விரைவாக செய்ய


கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை விரைவாக செய்ய Addition game என்கிற Software உதவி செய்கிறது.
இந்த software –ல் ஏளியன்ஸ்கள் (Aliens) கூட்டல், கழித்தல் என மாற்றி மாற்றி கேள்விகள் கேட்கப்படுகிறது. சரியான விடையை அளித்தால் திரும்பி சென்றுவிடுகிறது. தவறான விடையளித்தாலோ அல்லதுவிடையளிக்க தாமதம் செய்தாலோ நம்முடைய நகரத்தின் மீது எரி குண்டுகளை வீசிவிட்டு செல்கின்றன. இதனால் மாணவர்கள் நகரத்தை காப்பாற்றும் எண்ணத்துடன் விரைவாக கணக்குகளை செய்து சரியான விடையை விரைவாக  அளிக்கின்றனர்.
இதனை முடித்த மாணவர்கள் மனதில் spiderman, superman போன்ற எண்ணம் வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.


பயன்படுத்தும் முறை:



இதில் Beginner, Intermediate, Advanced, Impossible போன்ற பல நிலைகள் உள்ளது. Beginer Stage – ல் எளிய கணக்குகளும் intermediate Stage –ல் சற்று கடினமான கணக்குகளும் கேட்கப்படுகிறது. எளிமையிலிருந்து கடினம் என்ற இலக்கு நோக்கி செல்வதால் மாணவர்கள் சிரமமின்றி மகிழ்ச்சியுடன் கற்கின்றனர். ஒவ்வொரு Stage- லும் Level 1, Level 2, Level 3 என 10 Levels உள்ளது. 10 Levels யையும் முடிக்கும் மாணவர்கள் கணித வகுப்பில் தன்னம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் பங்கேற்று சிறந்த மாணவர்களாக திகழ்கின்றனர் எங்கள் பள்ளி (ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, பொன்பத்தி) மாணவர்கள். நீங்களும் இதை பயன்படுத்தி எப்படி உள்ளது என்று தங்கள் கருத்தை பகிரவும்.


No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்