Tuesday, November 26, 2013

ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கற்பனைத் திறன்

தமிழ்
தமிழினை படிக்க வேண்டும்
தமிழனாக வாழ வேண்டும்
தரணியில் அதன் புகழை
தயக்கமில்லாமல் பரப்ப வேண்டும்.
ஆங்கிலம்
ஆங்கிலமும் பயில வேண்டும்
அதனறிவைப் பெற வேண்டும்
அகிலமெங்கும் பேசுவதால்
அவசியமாய் அதை
கற்க வேண்டும்.
கணிதம்
கணிதம் கற்க வேண்டும்.
கணக்காய் நடக்க வேண்டும்.
கடினமாய் இருந்த போதினும்
கசப்பின்றி பயில வேண்டும்.
அறிவியல்
அறிவியலை அறிய வேண்டும்.
அறிஞனாக உயர வேண்டும்.
பிரிவு பல இருந்தாலும்
பிளவு இன்றி கற்க வேண்டும்.
வரலாறு
வரலாற்றை கற்க வேண்டும்.
புதுவரலாறு படைக்க வேண்டும்.
பொறுப்பாக எல்லாம் கற்று
புகழ் பெற்று வாழ வேண்டும்.

 மு.யாசர் அராபத்

‘IX’ STD ‘B’ SEC

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்