Friday, April 13, 2018

திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் புனைப்பெயர் கொண்ட கரிகால் சோழன்


கரிகாலன் சோழன்:


      
சங்க காலத்தை சேர்ந்த சோழ அரசர்களில் மிக முக்கியமான சிறப்புமிக்க அரசன் கரிகால சோழன். இளஞ்செட்சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவர் தான் கரிகாலன் சோழன். தனது முன்னோர்கள் ஆண்ட நிலப்பரப்பை விட சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய பெருமை கரிகாலனுக்கு இருக்கிறது.களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும் வரலாற்று உண்மைகள் வியப்பின் உச்சம். 
காஞ்சி முதல் காவிரி வரை சோழ ராஜ்ஜியம் விரிவடைய காரணமாக இருந்தார் கரிகாலன். சங்ககால சோழர்களில் கரிகாலனுக்கு சமமான, இவரை தாண்டிய புகழுடையவர் வேராரும் இல்லை என்ற பெயரும் கரிகாலனுக்கு உண்டு.

பெயர் காரணம்:

     கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இவருக்கு இப்பெயர்  வந்ததாக வரலாற்று கூற்றுகள்  தெரிவிக்கின்றன. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. 

 

சிறைவாசம்:
கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான். அதன் பிறகு சேர, பாண்டிய மன்னர்கள் உள்பட பலர் ஆட்சியை பிடிக்க போராடினர். அதன் விளைவாக அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர் இவ்வாறு, 
      புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின்  சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

  

புனைப்பெயர்கள்: 

   கரிகாலன் சோழனுக்கு திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் புனைப்பெயர்களும் உண்டு.

  

வெண்ணிப் போர்:

     இவரது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இந்த போர் தான் என்று கூறப்படுகிறது எனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவர் முறியடித்தார். இப்போரில் முதுகில் புண்பட்ட  சேரமான் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தார். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.
இவரது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவர் முறியடித்தார். கரிகாலனின் படைகள் அவரது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் மனைவி:

     நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார். கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா செய்யுள்கள் சில பாடியுள்ளார்

கல்லணை: 
 உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள் ஒன்று கல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழனால் காவேரி  ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த அணைஇந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி அணையின் தண்ணீரை தடுத்துவிவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்இத்தகைய  திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும் வலுவானநிலையில் உள்ளது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டும் இணைந்த ஒரு அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அற்புதமான படைப்பே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இந்த அணையை வந்து பார்த்து செல்தால், இது ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.                
இறப்பு:
வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார். மற்றும் பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது


No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்