Monday, June 20, 2016

This week Educational Software is Graph Maker:



இந்த Educational Software மூலம் ஆறாம் வகுப்பில் உள்ள பயிற்சி 3.2ல் 7 கணக்குகளையும் மற்றும் எட்டாம் வகுப்பில் உள்ள பயிற்சி 3.1ல் உள்ள 10 கணக்குகளையும் மற்றும் 3.2ல் உள்ள 15 கணக்குகளையும் சரியாக செய்யவும், செய்த கணக்குகள் சரியாக உள்ளதா? என சரிபார்க்கவும் உதவுவதோடு, மாணவர்கள் ஆர்வமுடன் கற்கவும் உதவுகிறது.
இந்த Educational Software ல் X அச்சிலும், Y அச்சிலும் மாணவர்கள் விவரங்களை கொடுத்தவுடன் செவ்வக விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம் மற்றும் வட்ட விளக்கப்படம் என மாணவர் விரும்பும் படங்கள் தோன்றும். இவற்றின் மூலம் எவ்வாறு விளக்கப்படங்கள் வரையலாம் என மாணவர்கள் அறிந்து செயல்பட முடிகிறது. அத்துடன் பல வண்ணங்களில் கண்ணுக்கு விருந்தாகவும் அமைகிறது. மாணவர்கள் வட்ட விளக்கப்படங்களை மிகுந்த ஆர்வத்துடன் செய்து செய்து பார்க்கின்றனர். அதற்கு காரணம் Animation தான். கொடுக்கும் விரங்களுக்கு ஏற்றார்போலும், சதவீத்தத்திற்கு ஏற்றார்போலும் Animation வருவது கூடுதல் சிறப்பு. தாங்களும் தங்கள் மாணவர்களுக்கு இதை பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Download செய்து பயன்படுத்தவும் நண்பர்களே!
http://www.softpedia.com/…/Others/Home-Ed…/Graph-Maker.shtml

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்