Monday, June 20, 2016

Snake maths software

Snake Babu தெரியும் Snake Maths தெரியுமா?
Snake Maths என்பது ஒரு Maths Educational Software. 23.10.2015 அன்று Snake Maths என்ற Educational Software மூலம்அடிப்படை கணித செயல்பாடுகளை எம்பள்ளி மாணவர்கள் கணினி மூலம் கற்றனர். Add User என்ற இடத்தில் மாணவர்களின் பெயர் மற்றும் வயதினை பதிவிட்டப்பின் Addition, Subtraction, Multiplication, Division போன்றவற்றில் எது வேண்டுமோ அதை கிளிக் செய்தவுடன் Time Speed set செய்துகொண்டு Practice என்பதை கிளிக் செய்து கணக்குகளை செய்ய தொடங்கலாம். கணக்குகள் போடப்போட Percentage-ல் மதிப்பெண்கள் காட்டிக்கொண்டே இருக்கும். இதனால் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து விரைவாக செயல்படுகின்றனர். சரியாக செய்தால் Smiling face லும் தவறாக செய்தால் Crying face லும் பொம்மை வருவது கூடுதல் சிறப்பு. இதேபோல் குட்டி பிள்ளைகளுக்கு பிடித்த Math Ninja Educational games மாணவர்களுக்கு பிடித்தமானதாக உள்ளது. இதிலும் பல நிலைகள் உள்ளது. மாணவர்களுக்கு Easy, intermediate, Expert என மாணவர் விரும்பு Levels யை எடுத்து விளையாடிக்கொண்டே கணிதம் கற்க வழிவகை செய்யலாம். 

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்