Sunday, November 29, 2015

கணித பாடம் கற்பித்தலின் அவசியம்

“என்னும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்ற ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை அடிப்டையாகக் கொண்ட கணிதப்பாடமும் எழுத்தை அடிப்டையாகக் கொண்ட மொழிப்பாடமும் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றுள் கணித பாடம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

கணிதம் எண்கணிதம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுகின்றது. ஆரம்பக் கல்வி பெறும் பிள்ளைகள் 1 இலிருந்து 100 வரை சரியாக எண்ணுவதற்குக் கற்றுக் கொண்டால் தான் கூட்டல் - கழித்தல் - பெருக்கல் - பிரித்தல் போன்ற கணக்குகளைப் படிப்படியாக செய்து கொள்ளமுடியும்.
‘மொண்டிசூரி’ப் பாடசாலையில் சேர்ந்து ஆரம்பக் கல்வியைத் தொடரும் பிள்ளைகள் பொருட்களை இனங்கண்டு எண்ணுவதற்கு முற்படுகின்றனர். முதலில் கைவிரல்களை எண்ணுவதற்கு பிள்ளை தயாராகின்றது. ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் என்றும் இரண்டு கைகளிலும் 10 வில்கள் என்றும்
எண்ணிப் பார்கின்றனர்.
அதேபோன்று ஒவ்வொரு காலிலும் 5 விரல்கள் என்றும் எண்ணிப்பார்க்கின்றனர். கண்கள் 2 என்றும், காதுகள் 2 என்றும், மூக்கு 1 என்றும் எண்ணி அறிந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பொருட்களையும் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்ப்பது பழங்களில் ஒரு சில பழங்கள் அவிந்து விட்டால் நல்ல பழங்கள் எத்தனை என்றம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டியுள்ளனர். எனவே ஆரம்பக் கல்வியில் எண்ணிப் பார்க்கும் முறையை சிறுவர்கள் கண்டறிகின்றனர்.
உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்கள் கணித பாடத்தில் திறமையாக இருக்க வேண்டியுள்ளனர். விசேடமாக விஞ்ஞானத்துறையில் உயர்தரக் கல்வியைப் பெற விரும்புவோர் கணிதத்தை நான்கு விளங்கிச் செய்யக் கூடியவர்களாக இருக்கவேண்டும். வானவியல் இரசாயனம், உயிரியல், பெளதீகவியல் போன்ற பாடங்களை ஆழமாக கற்போர் கணிதத்தில் திறமை பெற்றிருப்பதால் தான். வெற்றிகரமாக அப்பாடயலாம்.
அது மாத்திரமன்றி ஓர் ஆய்வாளர் தனது ஆய்வுகளை நடத்தும் போது கணிதத்தோடு தொடர்புடைய பிரச்சினைகளை விடுவிக்க கணித அறிவு மிகவும் தேவைப்படுகின்றது. அறிவு நுணுக்கம் பெறுவதற்கு கணித அறிவு இன்றியமையாதது.
மேலும் ஒருவர் கல்விகற்று வெற்றிகரமாக செயல் புரிவதற்கு கடமைகளை நிறைவேற்றுவதற்கு கணக்குப் பாடம் மிகவும் துணை புரிகின்றது எனலாம். உதாரணமாக ஒருவர் ஒரு கம்பனியில் கணக்காளராக அல்லது ஒரு கடையில் கணக்குப் பிள்ளையாக தொழில் செய்வதெனில் கணக்குப் பார்க்கும் நுண்ணறிவு அவருக்கு மிக மிக அவசியமாகின்றத.
கணக்குப் பரிசோதகராய் தொழில் பார்ப்போருக்கும் கணித அறிவு மிகவும் வேண்டற்பாலது. எனவே பாடசாலைகளில் கணிதப் பாடத்தை எதிர்காலப் பயன் கருதி மிகவும் சிரத்தையுடன் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டியுள்ளனர். உண்மையில் பார்க்கமிடத்து கணிதத்தில் திறமையுடையோர் திட்பமான அறிவு பெறுகின்றனர்.
(திணீணீuraணீy) இவ்வாறான அறிவு உடையவன் தனது வாழ்க்கையைக் கணக்குப் போட்டுத்தான் நடத்துவான். எந்தப் பிரச்சினையாயினும், அதனைத் தீர்ப்பதற்கு கணக்குப் போட்டுப் பார்ப்பான்.
எனவே, கணிதம் கற்பதனால் புத்தி கூர்மை, நிதானப்பண்பு ஆகியன விசேடமாக வளர்ச்சி அடைகின்றன. எனவேதான் கணிதப் பாடம் சகல பாடசாலைகளிலும் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது.
உண்மையில் கணக்குப் பாடம் ஒரு தொடர்ச்சியான செயற்கிரமம் அதனால் தொடரில் ஏதாவது குறைவு ஏற்பட்டால் கணக்கில் செய்ய முடியாமல் ஆகிவிடுகின்றன.
பிழைகள் ஏற்படுவதனால் மனத் தளர்ச்சி ஏற்படுகின்றத. அதனால், கணக்குப் பாடத்தில் ஆர்வம் குன்றிவிடலாம். அவ்வாறு ஏற்படாது. சரிவர கணக்குப் பாடத்தைக் கற்று விளங்கிக் கொள்ள வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
கணக்குப் பாடம் பல பிரிவுகளை உடையாத இருப்பினும், கணக்கு என்பது ஒன்று தான். ஒரே விடயத்தில் பல அம்சங்கள் அமைகின்றன அவ்வளவு தான்.
கணக்கு அறிவை ஒருவர் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை விடுவிக்க முயற்சி செய்தால் வேறுபாடுகுள் நீங்கிவிடும். உதாரணமாக வீட கட்டும்போது கணிதத்தின் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன.
வீட்டுப்புற உருவ அமைப்பு(ஜிlan) வரையும் போது கோணம், நீள் சதுரம், சதுரம், வட்டம், அரைவட்டம் போன்ற (மிலீoசீலீtry) அறிவு தேவைப்படுகின்றது.
செலவு மதிப்பீடு(ரிstணீrலீtலீ) செய்யும் போது கூட்டல், பெருக்கல், பிரித்தல் அறிவு அவசியப்படுகின்றது. எனவே பாடசாலைகளில் மாணவர்கள் கணிதப் பாடத்தைக் கற்கும் போது வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சாதனமாக அது அமையவேண்டும்.
கணித விதிகளைக் கற்பிக்கும் போது இலகுவான கணக்குகளையே பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் செய்கை முறை மூலமாக விதிகளை மனதில் பதித்துக் கொள்வார்கள்.
பிள்ளைகளுக்கு கணக்குகளைத் தயாரிக்கும்போது பிள்ளைகளின் சூழலையும், பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டே கணக்குகள் அமைய வேண்டும்.
குறிப்பாக பாலர் வகுப்பில் கணிதம் கற்பிக்கும்போது அனுபவங்கள் சுயமுயற்சிகள் மூலமாகவே அப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
கணிதத்தில் முதலில் எழுத்து வேலையைச் செய்விக்கக் கூடாது. ஆரம்பத்தில் வாய்மொழி மூலமாகவே கணக்குகளை மாணவரிடையே வழங்கி மனக் கணித முறையை பயிற்றுவிக்க வேண்டும். அதன் விளைவாக எதனையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும் என்ற பயிற்சி ஏற்படுகின்றது.
பாலர் கீழ்ப்பிரிவில் 1ம், 2ம் தவணைகள் வரை, பிள்ளைகளுக்கு கணிதப் பாடத்தில் எழுத்துப் பயிற்சிகள் கொடுப்பது பொதுத்தமில்லை. ஆரம்பத்தில் கூடியளவு மனன வேலையே அளிக்க வேண்டும். கடைவைத்து விளையாடுதலை வகுப்பில் அறிமுகம் செய்யலாம்.
1 ஆம் வகுப்பில், ஒரு கலன் வைத்து, அதில் ஒர போத்தல் கொண்டு தண்ணீர் ஊற்றச் செய்யலாம். 6 போத்தல்கள் நிரப்பினால் கலன் நிறைந்து வழியும் என்பதை உணர்த்த வேண்டும்.
அத்துடன் கனவடிவங்கள் பற்றிப் படிப்பிக்கலாம். கோணம், சதுரம், உருண்டை இவைகளைக் கொண்டு விளையாடச் செய்யலாம். அதனால் பிள்ளைகள் கனவடிவங்கள் பற்றி அறிந்து கொள்ளமுடியும்.
2 - 4 ஆம் வகுப்புக்கள் வரை கணிதத்தில் எழுத்து வேலையும், இலக்கங்களின் உபயோகங்களும் படிப்படியாகக் கூட்டப்படவேண்டும்.
4 விதிகளிலும் நல்ல திட்பம் ஏற்பட வேண்டும். 5 ஆம் வகுப்பில் 16 ஆம் வாய்ப்பாடு வரையில் ‘@!திய மனப்பாடம் ஏற்பட வேண்டும். 4 ஆம் வகுப்பு வரை 4 விதிகளில் போதிய திறமை ஏற்படாவிடில் பிற்கால வாழ்வில் இதை ஈடு செய்வது கஷ்டமாக இருக்கலாம்.
பொதுவாக நோக்குமிடத்து மனக் கணிதத்துக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும். மனதால் முடியாத வேளையிலேயே எழுத்து மூலம் எழுதி கணக்குப் பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும் மாணவர்கள் கணக்குப் பார்க்க எப்பொழுதும் பேனாவையும் கடதாசியையும் நம்பியிருக்கக் கூடாது. அத்துடன் கணிதத்தில் சுருக்க முறைகளை மாணவர் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் விளைவாக விரைவும் திட்பமும்(ஷிpலீலீனீ anனீ aணீணீuraணீy) மாணவர்களுக்குக் கிடைக்கும்.
எனவே கணித பாடம் பாடசாலைக் கல்வியில் சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும் என்பது உணரப்பட்டு அதற்கான வசதிகள் வழங்கப்பட்டு விரிவாக்கப்படுதல் அவசியமாகும்.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்