Saturday, August 8, 2015

உங்கள் மாணவர்களை கணிதத்தில் புலியாக மாற்ற

உங்கள் மாணவர்களை கணிதத்தில் புலியாக  மாற்ற TUXMATHS என்ற Educational software யை பயன்படுத்தி பாருங்கள். இந்த Educational software கணிதத்தின் அடிப்படை செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்களை பல்வேறு வழிகளில் கற்றுக்கொள்ள பயன்படுகிறது. அதுவும் கணினியின் உதவியுடன் விளையாட்டு முறையில் கற்கலாம். இந்த Educational software யை முழுமையாக பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் மாணவர்கள் கணிதத்தில் புலியாக திகழுவார்கள். இதில் தனித்தனியாகவும், குழுவாகவும் செயல்படலாம். மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடவும் முடியும். எத்தனை  மாணவர்கள், எத்தனை  சுற்றுக்கள் என கேட்பதோடு அவர்களின் பெயரையும் பதிவு செய்து விளையாடி கற்கலாம். இறுதியில் யார் வெற்றி பெற்றவர் என அறியவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு. நீங்களும் உங்கள் பள்ளியில் இதை பயன்படுத்தி உங்கள் மாணவர்களை கணித புலியாக மாற்றுங்கள் எனதருமை  ஆசிரிய நண்பர்களே. இதைப்போலவே ஆங்கிலம் கற்க TUX TYPE,  ஓவியத்திறனை வளர்க்க TUXPAINT என்ற Educational softwares யை பயன்படுத்தலாம். இவற்றை Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.




No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்