Sunday, December 1, 2013

கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல்

வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக மூன்று விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன. அதில் இந்த பதிவின் வாயிலாக அந்த மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம்.

நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம். அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது. வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா
என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.

முதலாவதாக                                                                                                                                             Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது. 



இரண்டாவதாக                                                                                                                                                                                                                                                                                 Un Stoppable  இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.



மூன்றாவதாக                                                                                                                                                                                                                                                                                   Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.



இதில் சில மென்பொருள் தரவிறக்கி உபயோகிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன். 

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்