Thursday, August 14, 2014

கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :


    
1) வரலாற்று ஆசிரியர் ராபர்ட் கனிகல் (Robert Kanigel)என்பவர் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை'அறிய இயலாத இறுதி எண்ணை அறிந்த மனிதன் (The man who knew infinity)' என்று நூலாக எழுதினார். இசைக்கு ஒரு மொசார்ட் (Mozart) போலபௌதீகத்திற்கு ஒரு ஐன்ஸ்டைன் (Einstein) போலகணிதத்திற்கு ஒரு ராமானுஜன் என்கிறது இந்நூல்.

     2) 1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில்இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது.  அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார்.  பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே.

     
3) 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள்இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

     4) சென்னைத் துறைமுக [Madras Port Trust ] நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டிஷ் இஞ்சினியர்ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர்இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த  வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டிஅவரது கணிதப் படைப்புக்களைஇங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள்.  அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்!  அவர்தான்அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

5) கணித உலகிற்கு இராமானுஜன் விட்டுச்சென்றது :
      (i) மூன்று குறிப்பேடுகள்
   (ii) சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று          காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913 – 1914)
      (iii) 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போனக் குறிப்பேடு.
      (iv) கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகள்.

6) இராமானுஜன் ஆய்வுகளில் “ Theory Of Equation” ,  “ Theory Of Numbers” , “ Definite Integrals” , “Theory Of Patricians” , “Elliptic Functions and Continued Fractions”   எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

7) இராமனுஜருக்குப் பிறகு இவரது ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

8) இவருடைய “Mock Theta Functions”  எனும் அராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.

9) இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

10) ஹார்டி சொல்கிறார் – “நான் அவருக்கு சொல்லிக் கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றதுதான் அதிகம்.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்