Thursday, July 24, 2014

முழு வர்க்கமூலங்கள் (Perfect Square Roots)

எந்த ஒரு எண்ணும் x*x என்று எழுதப்பட்டால் x என்பது அவ்வெண்ணின் வர்க்கமூலம் எனப்படும்.

52 = 5 *5 =25

இங்கு 5 ஐ 25 ன் வர்க்கமூலம் எனகிறோம்.
வர்க்கமூலத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பு கீழ்கண்ட எண்களின் வர்க்கத்தை மனப்பாடம் செய்து கொள்வது அவசியம்.
வர்க்கமூலத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பு கீழ்கண்ட எண்களின் வர்க்கத்தை மனப்பாடம் செய்து கொள்வது அவசியம்.
 
எண்
வர்க்கம்
11
24
39
416
525
636
749
864
981
10100
ஒரு முழு வர்க்கமானது கண்டிப்பாக 2,3,7 மற்றும் 8 ல் முடியாது.
இப்போது நாம் முழு வர்க்கமூலங்களைப்
பார்ப்போம்.

உதாரணம் 1: √1089 = ?


              √1089
 easy square rooteasy square root
         33     (or)     37

வழிமுறை :

படி 1 : கொடுக்கப்பட்ட எண்ணின் கடைசி இலக்கம் 9 ல் முடிவடைகிறது. எனவே வர்க்கமூலமானது 3 அல்லது 7 ல் தான் முடிவடைவதாக இருக்க முடியும். (அட்டவணை படம் 1 யை காண்க : 32=9 அல்லது 72=49)
படி 2 : பின்னர் எண்ணின் கடைசி இலக்கத்திற்கு பக்கத்தில் (இடது) உள்ள இலக்கத்தை நீக்கவும்.
படி 3 : மீதமுள்ள 10 க்கு தோரயமான வர்க்க மூலத்தை கண்டுபிடிக்கவும். அதாவது 3 * 3 = 9. (10 க்கு மிகாமல் இருக்கவேண்டும்).
படி 4 : (33)2அல்லது (37)2 என்ற இரண்டு எண்களில் ஏதோ ஒன்றுதான் விடையாயிருக்கும், நமக்கு ஏற்கனவே 5ல் முடிவடையும் எண்ணிற்கான வர்க்கம் தெரியும்.
எனவே  (35)2
=3 (3+1) / 52= 12 / 25 = 1225.
(35)2 ஆனது 1089 ஐ விட பெரிய எண்ணாகும். எனவே (37)2 கண்டிப்பாக விடையாக இருக்காது. எனவே 33 தான் விடை என்று தீர்கமாக சொல்லலாம்..

உதாரணம் 2: √6561 = ?


              √6561
 easy square rooteasy square root
         81     (or)     89

வழிமுறை :

படி 1 : கொடுக்கப்பட்ட எண்ணின் கடைசி இலக்கம் 1 ல் முடிவடைகிறது. எனவே வர்க்கமூலமானது 1 அல்லது 9 ல் தான் முடிவடைவதாக இருக்க முடியும்.(அட்டவணை படம் 1 யை காண்க : 13=1 அல்லது 93=81)
படி 2 : பின்னர் எண்ணின் கடைசி இலக்கத்திற்கு பக்கத்தில் (இடது) உள்ள இலக்கத்தை நீக்கவும்.
படி 3 : மீதமுள்ள 65 க்கு தோரயமான வர்க்க மூலத்தை கண்டுபிடிக்கவும். அதாவது 8 * 8 = 64. (65 க்கு மிகாமல் இருக்கவேண்டும்).
படி 4 : (81)2அல்லது (89)2 என்ற இரண்டு எண்களில் ஏதோ ஒன்றுதான் விடையாயிருக்கும், நமக்கு ஏற்கனவே 5ல் முடிவடையும் எண்ணிற்கான வர்க்கம் தெரியும்.
எனவே  (85)2
=8 (8+1) / 52= 72 / 25 = 7225.
(85)2 ஆனது 6561 ஐ விட பெரிய எண்ணாகும். எனவே (89)2 கண்டிப்பாக விடையாக இருக்காது. எனவே 81 தான் விடை என்று தீர்கமாக சொல்லலாம்..

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்