Friday, April 25, 2014

பெண்கள் உரிமை


இந்திய அரசியலமைப்பு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் பெண்கள் நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.

ஒவ்வொரு வருடம் மார்ச் 8 அன்று பன்னாட்டு மகளிர் தினமாக கொண்டாடப் படுகின்றது.

பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள்-

1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு

பின்பற்றப் படுகின்றது.
2. 1956- ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
3. 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
4. 1956 ஆம் அண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம், இந்து விதவைகள் (கைம்பெண்கள்) மறுமணத்தை அங்கீகரிக்கின்றது.
5. இந்து திருமணச் சட்டம் (1964 இல் தமிழக அரசின் திருத்தச்சட்டப்படி) சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம்.
6. 1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.
7. தமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.

பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்

பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு பெண்களுக்கான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்

1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டம்
1951 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சட்டம்
1952 ஆம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் சட்டம்
போன்ற சட்டங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அவர்களின் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்