குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 வது பிரிவின் கீழ் ஓரிடத்தில் சட்டவிரோதமாக கூடுவதற்க்கு தடை உத்தரவு பிறபிக்கப்படுகிறது. மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர் தன்து நிறுவாக பகுதியில் உள்ள எங்கு வேண்டுமானாலும் இந்த தடை உத்தரவை பிறப்பிக்க இயலும்.கலவரங்களை தடுக்கவும் , பொது அமைதியை பராமரிக்கவும் இந்த தடை உத்தரவு பயன்படும்.
இந்த சட்டதின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடத்தில் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டமாக கூடுவது தவறாகும். அந்த கூட்டத்தினரால் பொது அமைதிக்கு குத்தகம் ஏற்பட்டால் கூட்டத்தில் இருந்த அனைவருமே தண்டனைக்கு ஆளாவார்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்