Monday, November 4, 2013

பெரிய எண்களை 9ஆல் வகுத்தல் - II

221013 இந்த எண்ணை நமது மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் கடைசி இலக்கம் வரும்போது 9லிருந்து 9ஐ கழிப்பது போல வருகிறது. அதனால் ஈவு 24557, மீதி 0.


சரி இப்போது அதே எண்ணில் ஓரிரு மாற்றங்கள் செய்து 221021 என மாற்றுவோம். இந்த எண்ணை மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் என்ன ஆகும்?
221012/9 = ?
கடைசி இலக்கம் வரும்போது 6+2=8 என வருகிறது. விடை ஒன்பதை விட குறைவாக இருப்பதால் 8ஐ அப்படியே எழுதிவிட்டோம். எனவே ஈவு 24556, மீதி8.



இனி இன்னொரு கணக்கை பார்ப்போம்.

இந்தக் கணக்கில் கடைசி இலக்கம் வரும்போது, 7+ 6 = 13 என வருகிறது. 13 என்பது 9ஐ விட பெரிய எண் என்பதால் அதிலிருந்து வழக்கம் போல 9ஐ கழிக்க வேண்டும்.
எண் 13லிருந்து 9ஐக் கழித்தால் விடை நான்கு. எனவே மீதி 4. அடுத்தது ஈவுக்கு வருவோம்.
எண் 13லிருந்து 9ஐ ஒரு முறை கழிக்க முடியும் என்பதால் அந்த ஒன்றை முந்தைய இலக்கம் 7டன் கூட்டவேண்டும். அதாவது ஈவு 7+1=8, மீதி 4
விசித்திரமான எண்கள்சில தேதிகள் மிகவும் சுவாரசியமானவை. உதாரணத்திற்கு பின்வரும் தேதிகள்.
7 August 2008 = 7 + 8 + 2 + 0 + 0 + 8 = 25 = 2 + 5 = 7
8 August 2008 = 8 + 8 + 2 + 0 + 0 + 8 = 26 = 2 + 6 = 8
9 August 2008 = 9 + 8 + 2 + 0 + 0 + 8 = 27 = 2 + 7 = 9

இந்தத் தேதிகளில் உள்ள நாள் மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றிலுள்ள எண்களை ஒற்றைப் படை வரும் வரை தொடர்ந்து கூட்டினால் தேதியே விடையாக வரும்.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்