Friday, April 25, 2014

F.I.R பதிவு செய்வது எப்படி?


First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை'. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

"இந்திய தண்டனைச் சட்டத்தில்,(ipc) அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?




ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால்

அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான்

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?


"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை"

அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை.

அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.

யார் தகவல் கேட்கலாம்?

எந்த ஒரு இந்திய குடிமகனும் தகவல் பெறலாம்.
யாரிடம் தகவல்

லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை?


உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா? லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம் லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

#ஜஸ்லாந்து:

இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச் சாலை தான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில்

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?


இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்குநடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.

‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்துகொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ,புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு

பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள்


விவாகரத்து கோர ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான உரிமை உண்டு. இருப்பினும், சில அடிப்படைக் காரணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரையறுக்கப்பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறிய தவறான உறவு மேற்கொள்ளுதல் (ஆண் ஆணுடனோ, மிருகத்துடனோ உடலுறவு வைத்துக்கொள்ளுதல்).

ஒரு திருமணம் சட்டப்படி நிலுவையில் இருக்கும் பொழுதே மறுமணம் செய்து கொள்ளுதல். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு இருந்தும்

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?


வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ

உயில் என்றால் என்ன?


ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்). உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது

தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் : கைது செய்யப்படுவோரின் உரிமைகள்!

கைது செய்யப்படுவோரின் உரிமைகள்!
 
"கைது" என்ற சொல் கைது செய்தல் அல்லது தடுத்தல் அல்லது ஒருவரின் சுயசுதந்திரத்தை பறித்தல் என்று பொருள்களில் கையாளப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் சுதந்திரம் தடைபட ஆரம்பிக்கும் போதே கைது நடவடிக்கை தொடங்கி விடுகின்றது.

ஆரம்பக் காலங்களில் ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களுக்குக் கூட கைவிலங்கு மாட்டுவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல விலங்கு மாட்டி வீதி வீதியாக அழைத்துக் கொண்டு

பெண்கள் உரிமை


இந்திய அரசியலமைப்பு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் பெண்கள் நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.

ஒவ்வொரு வருடம் மார்ச் 8 அன்று பன்னாட்டு மகளிர் தினமாக கொண்டாடப் படுகின்றது.

பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள்-

1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு