கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு அலர்ஜி அதிலும் பெரிய இலக்கு எண்களைக் கூட்டும் போது தவறுகள் அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளது. வேத கணிதமூலமாக கூட்டல் கணக்குகளை சுலபமாக காணமுடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பத்து இலக்க எண்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட எண்களை ஓரே நேரத்தில் கூட்ட எளிமையான வழிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
உதாரணம் 1: 124 + 894 + 684 + 263 = ?
வழிமுறை :
படி 1 : முதலில் மேற்கண்ட படத்தில் உள்ளதுபோல் எண்களை வரிசையாக எழுதிக் கொள்ளவும். பின்னர் ஒன்றாம் இலக்கத்திலுள்ள (முதலாவது வரிசை) 3 ஐயும் 4 ஐயும் கூட்டவும், 3+4=7. பிறகு 7 ஐ அடுத்துள்ள 4 உடன் கூட்டவும், 7+4=11. கூட்டுத்தொகை 10 க்கு மேல் போய்விட்டது. இப்போது 11ல் உள்ள 10 ஐ பிரித்து அதற்கு பதிலாக

