Saturday, December 28, 2013

Accident or Incident?

Photo: accident or incident? 

An ‘accident’ is a mishap that is not intentional.
He’s having an accident on his bike.

An ‘accident’ is also something that just happens by chance or unexpectedly.
It’s only an accident that I was there at the same time as you.


‘Incident’ refers to something that happens. Often a disturbance is called an incident.  
There was another incident last night with the neighbours arguing and shouting.
(photo from Julie Whitehead)An ‘accident’ is a mishap that is not intentional.
He’s having an accident on his bike.

An ‘accident’ is also something that just happens by chance or unexpectedly.
It’s only an accident that I was there at the same time as you.


‘Incident’
refers to something that happens. Often a disturbance is called an incident.
There was another incident last night with the neighbours arguing and shouting.
(photo from Julie Whitehead)

Take on or Take off?



to accept a task or a responsibility and try to do it as well as you can
I’m going to take on the job of selling three cars every week.

compete against, fight or challenge
Our team is prepared to take on the champions.

acquire; gain over time
Over time some words take on new meanings

allow on board
We stopped at Singapore to refuel and take on more passengers.

employ
Our company wants to take on some extra staff.

to succeed; begin to succeed
It took a while for the film to take off.

remove
I take off my clothes to have a shower.

leave the ground and start flying
I like to watch planes take off.

leave; go away
I'm going to take off to the beach for the weekend.

imitate; mimic
He can take off lots of famous people.

Saturday, December 21, 2013

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்


       சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒன்பதாம் வாய்ப்பாடு – கை விரல்கள் முலம் எளிமையாக கணக்கிடும் முறையை கூறினார்.
அதே முறையை பயன்படுத்தி மற்ற வாய்பாடுகளை உருவாக்கமுடியுமா என்று முயற்சித்து பார்க்கையில் முடியும் என்று விளக்கம் கிடைத்தது....

அதை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....

எட்டாம் வாய்பாடு:
உதாரணத்தோடு பார்ப்போம்: 8 x 3 = 24

9 தாம் வாய்பாடு போலவே, 8 ஆம் வாய்பாடுக்கும், 8 யை எந்த என்னால் பெருக்க வேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ள வேண்டும்(3 ஆல் பெருக்க, 3 ன்றாவது விரலை மடக்கவும்). இடது புறம் உள்ள விரல்கள் எண்ணிகையும் (2 விரல்கள்), மற்றும் வலது புறம் உள்ள விரல்கள் எண்ணிக்கையும் (7 விரல்கள்) சேர்த்து வரும் எண்ணிலிருந்து (27), மடக்கின விரலுக்கான எண்ணை (3) கழித்தால் வருவது (27-3=24). 8 ஆம் வாய்ப்பாடு உருவாகி விட்டது.

இதே போன்று

Friday, December 20, 2013

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு


இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல் அறிவியல்)பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல், பைன் ஆர்ட்ஸ்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பிப்.,23ம் தேதி நாடு முழுவதும் உள்ள மையங்களில் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, தேர்வு முறை குறித்த விவரங்களுக்கு கையேட்டில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு The Director, Research Unit, Block-6, Room -18, IGNOU, Maidan Garhi, New Delhi - 110068. என்ற முகவரியின் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Tuesday, December 17, 2013

"பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் "வீடியோகான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ –மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.

புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.

இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.

Friday, December 13, 2013

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக

அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தொடங்க ஒத்துழைப்பு நல்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


           பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

           பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி

தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம்


            நண்பர் போடிநாயக்கனூர் ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுத் துறை ) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ PDF கோப்பு வடிவில்....!

           "குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு ஒரு ஆர்வத்தில் பொழுதுபோக்காக பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்த்து எளிதாக படிக்க தனித்தனி தலைப்புகளாக, நேர்த்தியாக வடிவமைத்து அளித்தேன். பல நண்பர்கள் வி.எ.ஓ தேர்வுக்கும் அதே போல் அளிக்கும்படி தொடர்ச்சியாக வற்புறுத்திவந்தனர். நீங்கள் கோரியபடி பாடத்திட்டம் இத்துடன் இணைப்பில் காண்க."

              "பொது அறிவு, மனத்திறன் சோதனை, கிராம நிர்வாகம் மற்றும் புதியவர்களுக்கு தேர்வு முறை குறித்த விவரங்களையும் அளித்துள்ளேன். படித்து பயன்பெறுக."


ஸ்ரீநிவாச இராமானுஜன்


Ramanujan
காஸ், கும்மர் மற்றும் மிகைப்பெருக்கத் தொடர்களுக்கான விளைவுகளை தனி ஒரு ஆளாக இருந்து கண்டுபிடித்தவர், ஸ்ரீநிவாச இராமானுஜன். மிகைப்பெருக்கத் தொடரின் பகுதி தொகைகளையும், பொருட்களையும் ஆய்வு செய்வதில் அவர் காட்டிய ஆர்வமே அவருடைய பெரும்வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இவர் குறுகிய காலங்களிலேயே, (அதாவது 1914ஆம் ஆண்டு  முதல் 1918ஆம் ஆண்டு வரை) 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்


Abdul Kalam
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின்

கல்பனா சாவ்லா


Kalpana-Chawla
விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப்

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்


Venkataraman-Ramakrishnan
தமிழ்நாட்டில் பிறந்த, அமெரிக்கா இந்தியரான சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வு கழகத்தில் மூத்த விஞ்ஞானியாகவும் பணியாற்றியவர். ‘உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை கண்டறிந்ததற்காக, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ இவருக்கு வழங்கப்பட்டது. இத்தகைய உலகம் போற்றும் தமிழ் மனிதனின்

ஜி. என். ராமச்சந்திரன்


G_N_Ramachandran
கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் என்ற ஜி.என். ராமச்சந்திரன் 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சிறந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் ஆவார். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது, அதுமட்டுமல்லாமல், உயிரியலிலும், இயற்பியலிலும் பல முக்கிய ஆய்வுகளை

சுப்பிரமணியன் சந்திரசேகர்


Subrahmanyan-Chandrasekharசுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், ஒரு புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர் ஆவார். லாகூரில் பிறந்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் கல்விக் கற்று, பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அமெரிக்காவில் வாழ்ந்த அவர், விண்மீன்கள் கட்டமைப்புத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான “நோபல்பரிசு” பெற்றார். மேலும், ‘கோப்லி விருது’, அறிவியலுக்கான ‘தேசிய விருது’ எனப் பல தேசிய விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், ஏராளமான அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். உலக அளவில் குறிப்பிடத்தக்க வானவியல் இயற்பியலாளர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சந்திரசேகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் மேற்கொண்ட சாதனைகளை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


Subhas-Chandra-Bose
‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்

மகாத்மா காந்தி


Mahatma_Gandhi
‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின்

வீரபாண்டிய கட்டபொம்மன்


Veerapandiya-Kattabomman
தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு

பகத்சிங்


Bhagat Singh
பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை

பால கங்காதர திலகர்


Bal Gangadhar Tilak
லோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை

வ. உ. சிதம்பரம் பிள்ளை

வ. உ. சிதம்பரம் பிள்ளை

VOC
வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக

தீரன் சின்னமலை


Theeran-Chinnamalai
தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு

ஜான்சிராணி லக்ஷ்மி பாய்


Rani-Lakshmi-Bai
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

சுதந்திர தினம்

Independence-Day
1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக

குடியரசு தினம்

republic-day
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த

தேசிய சின்னங்கள்

தேசிய நதி
கங்கை அல்லது கேன்ஜஸ் இந்தியாவின் மிக நீண்ட நதியாகும். இது 2510 கி.மீ தூரத்திற்கு மலைகளின் மேல் ஓடிவருகிறது. இது, பகீரதி நதியாக, இமய மலையில் கங்கோத்திரி எனும் உருகும் பனிப்பாறைகள் நிறைந்த பனிப் பகுதியில் உருவாகிறது. இது பின்னர் அலகானந்தா, யமுனா, சன், கௌதமி, கோசி, காஹரா ஆகிய நதிகளோடு இணைந்து கொள்கிறது. உலகிலேயே வளமான விவசாய நிலத்தையும் நெருக்கமான மக்கள் தொகையையும் கொண்டது, கங்கை நதிப் படுகையே ஆகும்,. இது, ஒரு கோடி சதுரப் பரப்பளவை உள்ளடக்கியது. இதன் மேல் இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ஹரித்துவாரில் உள்ளது. மற்றொன்று பராக்காவில் உள்ளது. இந்த ஆற்றில் மட்டுமே வாழும் கங்கை நதி டால்பின் என்னும் நீர்வாழ் உயிரினம் மிகவும் ஆபத்தான விலங்கினமாகும். கங்கையை, இந்துக்கள், இந்நிலஉலகின் மிகவும் புனிதமான ஆறாகப் கருதுகின்றனர்.